விக்கிரம் சாராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்கிரம் அம்பாலால் சாராபாய்
Vikram Sarabhai.jpg
முனைவர். விக்கிரம் சாராபாய்
பிறப்புஆகத்து 12, 1919(1919-08-12) [1][2]
அகமதாபாத், இந்தியா
இறப்பு30 திசம்பர் 1971(1971-12-30) (அகவை 52)
கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஇயற்பியல்
பணியிடங்கள்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
ஆய்வு நெறியாளர்சர். ச.வெ.இராமன்
அறியப்படுவதுஇந்திய விண்வெளித் திட்டம்
விருதுகள்பத்ம பூசன் (1966)
பத்ம விபூசண் (இறந்த பிறகு அளிக்கப்பட்டது) (1972)[3]

விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai, ஆகஸ்ட் 12, 1919டிசம்பர் 30, 1971)[4] என்பவர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.[5] 1969 ஆம் ஆண்டு சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது பெற்றார்.[6]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

1919 ஆம் ஆண்டு ஆகத்து 12 அன்று ஆமதாபாதில் ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தார். அவர் எண்ணியிருந்தால் ஒரு தொழிலதிபராக உருவாகியிருக்கலாம். ஆனால் அவரது நாட்டம் எல்லாம் கணிதத்திலும், இயற்பியலிலும் தான் இருந்தது.

ஆய்வு நிலையங்கள் நிறுவுதல்[தொகு]

இங்கிலாந்தில் பி. எச். டி ஆராய்ச்சியை முடித்துத் திரும்பிய சாராபாயி, ஆமதாபாதில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) 11 நவம்பர 1947 இல் நிறுவினார்.[7] 1955 இல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கோடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவினார்.

இந்தியாவை விண்வெளி யுகத்திற்கு இட்டுச்செல்லல்[தொகு]

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமாக இருந்தார். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,4000 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (ISRO) விரிவாக்கினார்.

பிற துறைகளில் பங்கீடு[தொகு]

விண்வெளித்திட்டங்கள் தவிர, பஞ்சாலைத் தொழில், மேலாண்மைப்பயிற்று நிலையம் ஆகியவற்றையும் தொடங்கினார்.

விருதுகளும் பெருமைகளும்[தொகு]

 • பத்ம பூசண்
 • பத்ம விபூசண்
 • 1973இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டினர்.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Vikram Sarabhai Biography". mapsofindia (January 30, 2014). பார்த்த நாள் 22 July 2015.
 2. "About Vikram Sarabhai". iloveindia. பார்த்த நாள் 22 July 2015.
 3. "Padma Awards Directory (1954-2013)". Ministry of Home Affairs, Government of India (14 August 2013). மூல முகவரியிலிருந்து 15 நவம்பர் 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் July 21, 2015.
 4. "The Visionary- Vikram Ambalal Sarabhai". விக்ரம் சாராபாய் விண்வெளி மையம். மூல முகவரியிலிருந்து 10 மே 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 July 2015.
 5. "விண்வெளித்துறையின் “விக்ரமாதித்தன்”" (en-US) (2021-08-12).
 6. "Profile of the Awardee, Dr Vikram Ambalal Sarabhai". பார்த்த நாள் 22 Feb 2016.
 7. "BRIEF HISTORY". மூல முகவரியிலிருந்து 2016-04-08 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 28 மார்ச் 2016.
 8. Antonín Rükl: Atlas Měsíce, Aventinum (Praha 1991), chapter Bessel, page 74, ISBN 80-85277-10-7 (செக் மொழி)
 9. Sarabhai_(crater) - "Planetary Names: Sarabhai on Moon;". Gazetteer of Planetary Nomenclature, IAU, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, நாசா (Oct 18, 2010). பார்த்த நாள் 22 July 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்கிரம்_சாராபாய்&oldid=3352312" இருந்து மீள்விக்கப்பட்டது