சுனிதி குமார் சாட்டர்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுனிதி குமார் சாட்டர்சி

சுனிதி குமார் சாட்டர்சி (Suniti Kumar Chatterji 26, நவம்பர் 1890–29, மே 1977) என்பவர் இந்திய மொழியியல் அறிஞர், கல்வியாளர், இலக்கியவாதி ஆவார். இவர் எமெரிட்டஸ் பேராசிரியராகவும், தேசியப் பேராசிரியராகவும் இருந்தார். இந்திய நடுவணரசு பத்ம பூசண் விருதைப் பெற்றவர்.[1]

பிறப்பும் படிப்பும்[தொகு]

அவுராவில் உள்ள சிவ்பூர் என்னும் சிற்றுரில் பிறந்தார். ஆங்கிலத்தில் இளங்கலை (ஆனரசு) 1911 ஆம் ஆண்டிலும் முதுகலைக் கல்வியை 1913 ஆம் ஆண்டிலும் முடித்தார். இந்திய அரசின் உதவித் தொகை பெற்று டி.லிட். பட்டத்தை லண்டன் பல்கலைக் கழகத்தில் பெற்றார். இந்தோ ஐரோப்பியன் மொழிகள், பிராகிருதம், பெர்சிய மொழி, பழைய ஐரிசு, கோதிக் போன்ற மொழிகளைக் கற்றார். பாரிசுக்குச் சென்று இந்தோ ஆரியன், இந்தோ ஐரோப்பியன் மொழிகளை ஆய்வு செய்தார்.

பணிகள்[தொகு]

இந்தியாவுக்குத் திரும்பியதும் 1922 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியில் சேர்ந்தார்.

ரவீந்திரநாத் தாகூர் மலாயா, சுமத்ரா, ஜாவா, பாலி போன்ற நாடுகளுக்குச் சென்றபோது அவருடன் சுனிதி குமார் சாட்டர்சியும் சென்றார்.

கராச்சியில் நடந்த அனைத்திந்திய இந்தி மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றினார். ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற மொழியியல் மாநாடுகளில் கலந்து கொண்டார்.

வங்க மொழியின் மூலமும் வளர்ச்சியும் என்னும் இவரது நூல் சாட்டர்சியின் பெரும் படைப்பாகக் கருதப்படுகிறது.[2]

வங்க மொழியின் ஒலியன்கள் பற்றிய இவருடைய ஆராய்ச்சி வங்க மொழியியலுக்கு அட்டைப்படையாக விளங்குகிறது.

வகித்த பிற பதவிகள்[தொகு]

  • 1952-58 ஆண்டுகளில் மேற்கு வங்க சட்டமன்ற கவுன்சில் தலைவராக இருந்தார்.
  • 1969 இல் சாகித்ய அகாதமியின் தலைவராக ஆனார்.
  • எமெரிடஸ் பேராசிரியர், தேசியப் பேராசிரியர் ஆகிய மதிப்புமிகு பதவிகளில் இருந்தார்.

எழுதிய நூல்களில் சில[தொகு]

  • வங்க மொழியின் மூலமும் வளர்ச்சியும் [3]
  • வங்க மொழி ஒலியன்கள் படிப்பு
  • இந்தோ ஆரியமும் இந்தியும்
  • இராமாயணம்: தோற்றம்,வரலாறு தன்மை

மேற்கோள்[தொகு]

  1. http://en.banglapedia.org/index.php?title=Chatterji,_Suniti_Kumar
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-01-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-09-25 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. https://archive.org/details/OriginDevelopmentOfBengali