சர்வபள்ளி கோபால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர்வபள்ளி கோபால்,
సర్వేపల్లి గోపాల్‌
பிறப்பு(1923-04-23)23 ஏப்ரல் 1923
Madras, India
இறப்பு20 ஏப்ரல் 2002(2002-04-20) (அகவை 78)
சென்னை [formerly Madras], India
தொழில்வரலாற்று ஆய்வாளராவார்
தேசியம்இந்தியர்
காலம்பிரித்தானிய இந்தியா
கருப்பொருள்இந்திய வரலாறு

சர்வபள்ளி கோபால் (தெலுங்கு: సర్వేపల్లి గోపాల్‌) (23 ஏப்ரல் 1923 – 20 ஏப்ரல் 2002) ஒரு இந்திய வரலாற்று ஆய்வாளராவார். [1]

பின்புலமும் கல்வியும்[தொகு]

இவர் தெலுங்கு நியோகி (ஆந்திராவில் உள்ள பிராமணப்பிரிவு) குடும்பத்தில் பிறந்தார். தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்டவர். இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகனாவார்.

இவர் தன்னுடைய பட்டப்படிப்பை சென்னை பிரசிடன்சி கல்லூரியிலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தன்னுடைய தத்துவ பட்டத்தினை பெற்றார். (D.Phil)

வாழ்க்கை[தொகு]

இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இயக்குநாராகவும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றினார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் செயின்ட் அந்தோனி கல்லூரியின் இந்திய வரலாற்றுப் பிரிவின் வாசகராக இருந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை தலைவராக நியமிக்கப்பட்டார். [2]

இவர் புது தில்லியில் இயங்கும் தேசிய புத்தக அறக்கட்டளையின் தலைவராக 1970-களில் பதவி வகித்தார்.

இல் வாழ்க்கை[தொகு]

சர்வபள்ளி கோபால் காவேரி என்கிற இந்திரா ராமசுவாமியை 1949-ம் ஆண்டு மணந்தார்.

விருதுகள்[தொகு]

1999-ம் ஆண்டு இவர் இந்திய வரலாற்றிற்கு அளித்த பங்களிப்பிற்காக பத்ம விபூசன் விருது வழங்கப்பட்டது. [3]

நூல்கள்[தொகு]

  • History of Humanity: Scientific and Cultural Development, Vol. 7: The Twentieth Century, (Paris: UNESCO, Routledge, 2008) (co-author Tichvinskii, Sergei Leonidovich)
  • Jawaharlal Nehru: A Biography, (Delhi: Oxford University Press, 2004)
  • The Essential Writings of Jawaharlal Nehru, (New Delhi: Oxford University Press, 2003) (co-author Uma Iyengar)
  • Anatomy of Confrontation: The Babri Masjid Ramjanmabhumi Issue, (New Delhi: Viking, 1991)
  • Radhakrishnan: A Biography, (Delhi: Oxford University Press, 1992)
  • Economy, Society and Development:Essays and Reflections in Honour of Malcolm Adesheshiah, (New Delhi: Sage, 1991) (co-authors Kurien, C.T., E.R. Prabhakar)
  • Jawaharlal Nehru: An Anthology, (Delhi: Oxford University Press, 1983)
  • Selected Works of Jawaharlal Nehru, (New Delhi: Orient Longman, 1972–82) (co-authors Chalapatti Rau, M., Sharada Prasad, H.Y., Nanda, B.R.)
  • British Policy in India, 1858-1905, (Cambridge: Cambridge University Press, 1965)
  • Modern India, (London: Historical Association, 1967)
  • The Viceroyalty of Lord Irwin, 1926-1931, (Oxford: Clarendon Press, 1957)
  • The Viceroyalty of Lord Ripon, 1880-1884, (London: Oxford University Press, 1957)
  • The Permanent Settlement in Bengal and its Result, (London, G.Allen and Unwin, 1949)

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Ramachandra Guha (April 27, 2003). "Remembering Sarvepalli Gopal". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120430084004/http://www.hindu.com/mag/2003/04/27/stories/2003042700220300.htm. பார்த்த நாள்: 2006-11-03. 
  2. K. N. Panikkar (April 27 – May 12, 2002). "A great historian: Sarvepalli Gopal, 1923-2002". Frontline 19 (9). http://www.frontlineonnet.com/fl1909/19091220.htm. பார்த்த நாள்: 2006-11-03. 
  3. "Ministry of Home Affairs—Civilian Awards announced on January 26, 1999". Archived from the original on 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2006-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்வபள்ளி_கோபால்&oldid=3575212" இலிருந்து மீள்விக்கப்பட்டது