சிறீ பிரகாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்ரீ பிரகாசா அவர்களது உருவப்படம் பொறித்த இந்தியத் தபால் தலை

ஸ்ரீ பிரகாசா (Sri Prakasa, இந்தி: श्री प्रकाश) (ஆகத்து 3, 1890 – சூன் 23, 1971) ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார். இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார்.

சிறீ பிரகாசா 1890இல் வாரணாசியில் பிறந்தார். இளமையில் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நிர்வாகியாகவும் ஆய அமைச்சராகவும் பணியாற்றினார். தமது 80வது அகவையில் 1971இல் இயற்கையெய்தினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீ_பிரகாசா&oldid=3423109" இருந்து மீள்விக்கப்பட்டது