பி. வி. ராஜமன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. வி. ராஜமன்னார்
சென்னை உயர் நீதிமன்றத்தின்
தலைமை நீதிபதி
பதவியில்
1948–1961
தனிநபர் தகவல்
பிறப்பு 1901
இறப்பு 1979

பி. வி. ராஜமன்னார் எனச் சுருக்கமாக அறியப்படும் பகாலா வெங்கடரமண ராவ் ராஜமன்னார் (Pakala Venkataramana Rao Rajamannar, 1901–1979) ஓர் இந்திய நீதியரசர் ஆவார். இவர் தமிழக ஆளுநராக 1957 முதல் 1958 வரை தற்காலிகமாகப் பொறுப்பு வகித்துள்ளார்.[1] இந்தியா விடுதலை பெற்ற பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்தியத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்று 1948 முதல் 1961 வரை அப்பதவியில் இருந்தார்.[2]

1969இல் மாநில சுயாட்சி மற்றும் மைய அரசு-மாநில அரசுகளுக்கிடையேயான உறவாடல் குறித்து அப்போது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசு நியமித்த மூவர் குழுவிற்கு தலைவராகப் பணியாற்றினார். 1966-1969 காலகட்டத்தில் பி.வி. இராசமன்னார் இந்திய நான்காவது நிதிக் கமிசனின் தலைவராகவும் இருந்தார்.

சட்டத்துறை, நிர்வாகத்துறை நீங்கலாக இராசமன்னாருக்கு கலைகளிலும் மிகுந்த ஆர்வம் இருந்தது. புது தில்லியிலிருந்த சங்கீத நாடக அகாதமியின் முதல் நியமிக்கப்பட்ட தலைவராக பணியாற்றினார். இந்த அகாதமி வழங்கும் மிக உயரிய விருதான சங்கீத நாடக அகாதமி கூட்டாளர் விருது 1964இல் இவருக்கு வழங்கப்பட்டது.[3]

சென்னை கே.கே. நகரில் உள்ள பி.வி.இராசமன்னார் சாலை இவரைப் பெருமைப்படுத்துமாறு பெயரிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Indian states since 1947, (Worldstatesmen, 16 செப்டம்பர் 2008)
  2. The Honourable Chief Justices பரணிடப்பட்டது 2012-02-12 at the வந்தவழி இயந்திரம் (Madras High Court, 17 செப்டம்பர் 2008)
  3. "SNA: List of Sangeet Natak Akademi Ratna Puraskarwinners (Akademi Fellows)". Official website. 2016-03-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-11-10 அன்று பார்க்கப்பட்டது.

வெளிஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ராஜமன்னார்&oldid=3563269" இருந்து மீள்விக்கப்பட்டது