பி. சந்திர ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. சந்திர ரெட்டி
தலைமை நீதிபதி
ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம்
பதவியில்
1958–1964
தலைமை நீதிபதி
சென்னை உயர் நீதிமன்றம்
பதவியில்
1964–1966
தனிநபர் தகவல்
பிறப்பு சூலை 1, 1904(1904-07-01)
இறப்பு (1976-10-07)அக்டோபர் 7, 1976

பி. சந்திர ரெட்டி (P. Chandra Reddy) அல்லது பலகணி சந்திர ரெட்டி (சூலை 1, 1904–அக்டோபர் 7, 1976) ஓர் இந்திய நீதியரசர் ஆவார். இவர் நெல்லூரிலுள்ள வி.ஆர். மேநிலைப் பள்ளியிலும் சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். ஆகத்து 13,1928 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக சேர்ந்தார். குடியியல் வழக்குகளையும் குற்றவியல் வழக்குகளையும் எடுத்துக்கொண்டார். இந்த நீதிமன்றத்திலேயே சூலை 16, 1949இல் கூடுதல் நீதியரசராகப் பொறுப்பேற்றார். சூலை 5, 1954இல் ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் உருவானபோது அங்கு நிரந்த பொறுப்பேற்றார். சில நாட்களில் தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்தார். பின்னர் ஆந்திர தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

சிறிது காலம் ஆந்திர ஆளுநராக தற்காலிக பொறுப்பு வகித்தார். திசம்பர் 23, 1964இல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திசம்பர் 24, 1964 முதல் பெப்ரவரி 7, 1965 வரை தமிழக ஆளுநராக தற்காலிகப் பொறுப்பில் இருந்தார். சனவரி 7 1966இல் பணி ஓய்வு பெற்றார். அக்டோபர் 7, 1976 இல் இயற்கையெய்தினார்.[1] [2][3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. HON'BLE SRI JUSTICE P.CHANDRA REDDI (High Court of Andhra Pradesh, Hyderabad, 20 செப்டம்பர் 2008)
  2. Sixth Assembly First Session–First Meeting (Tamil Nadu Legislative Assembly, 21 செப்டம்பர் 2008)
  3. Past Governors (Raj Bhavan, Chennai, 20 செப்டம்பர் 2008)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சந்திர_ரெட்டி&oldid=3423114" இருந்து மீள்விக்கப்பட்டது