உடுப்பி ராமச்சந்திர ராவ்
யூ. ஆர். ராவ் | |
---|---|
![]() 2008 இல் ராவ் | |
பிறப்பு | அடமாறு, கருநாடகம், இந்தியா | 10 மார்ச்சு 1932
இறப்பு | 24 சூலை 2017 பெங்களூர் | (அகவை 85)
வாழிடம் | இந்திராநகர், பெங்களூர் |
தேசியம் | இந்தியர் |
துறை | விண்வெளி அறிவியல், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் நேரு விண்ணாய்வகம் |
ஆய்வு நெறியாளர் | விக்கிரம் சாராபாய் |
அறியப்படுவது | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
விருதுகள் |
|
துணைவர் | யசோதா ராவ் |
உடுப்பி ராமச்சந்திர ராவ் (Udupi Ramachandra Rao, 10 மார்ச் 1932 - 24 சூலை 2017)[1] பொதுவாக உ.ரா. ராவ் என அறியப்படுகிறார். இவர் ஒரு விண்வெளி அறிவியல் விஞ்ஞானி ஆவார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக முன்னர் பணியாற்றியிருக்கிறார். அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆய்வு மையத்தில் பணியாற்றியவர். இவர் இந்திய அரசின் பத்ம பூசன் விருதை 1976 ஆம் ஆண்டு பெற்ற இவருக்கு, 2017 இல் பத்ம விபூசண் வழங்கப்பட்டது. தனது இளங்கலை அறிவியல் படிப்பை சென்னைப் பல்கலைக்கழகத்தில் முடித்தவர்.[2] பின்னர், முதுகலை அறிவியல் படிப்பை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்திலும், முனைவர் படிப்பை குஜராத் பல்கலைக்கழகத்திலும் படித்தார்.
சுயசரிதை[தொகு]
கருநாடக மாநிலத்தின் உடுப்பியில் அடமாறு என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் இலட்சுமிநாராயண ஆச்சார்யா மற்றும் கிருஷ்ணவேணி அம்மா. அடமாறுவில் தனது ஆரம்பக்கல்வியை முடித்த இவர், உடுப்பி கிறுத்துவப் பள்ளியில் தனது மேல்நிலைக்கல்வியை முடித்தார். பின்னர், அனந்தபூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை அறிவியலை முடித்த இவர், பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியலை முடித்தார். பின்னர், டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதழின் பேரில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தனது முனைவர் ஆராய்ச்சியை முடித்தார்.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Indian space pioneer Udupi Ramachandra Rao passes away". 24 சூலை 2017. http://www.thehindu.com/sci-tech/science/indian-space-pioneer-udupi-ramachandra-rao-passes-away/article19340621.ece.
- ↑ "Prof. Udupi Ramachandra Rao - Biodata". ISRO இம் மூலத்தில் இருந்து 2009-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090816101622/http://www.isro.org/Ourchairman/former/urrao_biodata.aspx. பார்த்த நாள்: 2013-02-25.
- ↑ இவர், யசோதா இராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். "India's Pioneer Space Scientist – Professor Udupi Ramachandra Rao". karnataka.com. 2011-11-17 இம் மூலத்தில் இருந்து 2 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130402014422/http://www.karnataka.com/personalities/ur-rao/.