விசுவநாதன் ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விசுவநாதன் ஆனந்த்
VishyAnand09.jpg
முழுப் பெயர்விஸ்வநாதன் ஆனந்த்
நாடு இந்தியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1988)
உலக வாகையாளர்2000–02 (FIDE)
2007–2013
பிடே தரவுகோள்2789 (டிசம்பர் 2020 FIDE தரவுப் பட்டியலின்படி 15 ஆம் இடம்)[1]
உச்சத் தரவுகோள்2817 (மே 2011)

விஸ்வநாதன் ஆனந்த் (Viswanathan Anand, பிறப்பு: டிசெம்பர் 11, 1969, மயிலாடுதுறை, இந்தியா), இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக-சதுரங்க போட்டியின் வெற்றி வீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி 2020 டிசம்பரில் ஆனந்த் 2753 புள்ளிகள் பெற்று 15 இடத்தில் உள்ளார்.[2] உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்[3].

சதுரங்கமும் ஆனந்தும்[தொகு]

இந்திய சதுரங்க விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த் குறிப்பிடத்தக்கவர். 14 வயதில் 1983இல் இந்திய சதுரங்க சாம்பியன் ஆக 9/9 புள்ளிகள் பெற்றார். 15 வயதில் 1984இல் அனைத்துலக மாஸ்டர் (International Master) விருதினைப் பெற்றார். 16 வயதில் தேசிய வெற்றிவீரராக மேலும் இருதடவை இந்தவிருதைப் பெற்றார். இவர் ஆட்டங்களை வேகமாக ஆடி மின்னல் பையன் (lightning kid - மின்னல் வேகக் குழந்தை) என்ற பட்டப் பெயரையும் பெற்றார். உலக இளநிலை வாகையாளர் (1987-இல்) என்ற பெருமையை அடைந்த முதல் இந்தியரும் ஆனந்தே. விஷி எனச் செல்லமாக இவரது நண்பர்களால் சில சமயம் அழைக்கப் படுகின்றார்.

2008[தொகு]

இவர் முன்னாள் உலக வெற்றிவீரர் விளாடிமிர் கிராம்னிக்குடன் 2008 அக்டோபரில் நடந்த போட்டியில் வெற்றி பெற்று உலக வெற்றிவீரர் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார்.[4]

உலக சதுரங்க வாகையாளர் 2010[தொகு]

பல்கேரியாவின் தலைநகர் சோபியா உலகச் சதுரங்க வெற்றிவீரர்

பீடே உலக சதுரங்க வாகையாளர் 2000[தொகு]

வெல்வதற்கான வாய்ப்புக்களை மயிரிழையில் நழுவவிட்ட ஆனந்த், இறுதியாக 2000ஆம் ஆண்டில் தெகரானில் அலெக்சி சிறோவ் என்ற எசுப்பானிய வீரரை 3.5 - 0.5 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்ததன் மூலம் உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையைப் பெற்றார். எனினும், 2002-இல் நடந்த அரை இறுதிப் போட்டியில் வாசிலி இவான்ச்சுக்கிடம் தோற்றதனால் இப்பட்டத்தை இழந்தார்.

உலக சதுரங்க வாகையாளர் 2007[தொகு]

ஆனந்த் மெக்சிகோ நகரில் செப்டம்பர் 2007 இல் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் பங்குபெற்றார். செப்டம்பர் 29, 2007 இல் இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் 9/14 புள்ளிகள் பெற்று மறுப்பிற்கிடமில்லாத உலக சதுரங்க வாகையாளர் ஆனார்.

உலக சதுரங்க வாகையாளர் 2010[தொகு]

ஏப்ரல் - மேயில் நடைபெற்ற போட்டியில் பல்கேரியாவின் வெசலின் டோபலோவை 6.5 - 5.5 என்ற புள்ளிக்கணக்கில், கடைசி ஆட்டத்தை வென்றதன் மூலம், ஆனந்த் உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இதுவரை ஆனந்த் பெற்ற நான்காவது வாகையாளர் பட்டம் இது.

உலக சதுரங்க வாகையாளர் 2012[தொகு]

உருசியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற போட்டியில் இசுரேலின் போரிசு கெல்பண்டை (Boris Gelfand) சமன்முறி ஆட்டத்தில் வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக சதுரங்க வாகையாளர் பட்டத்தை வென்றார் [5].

உலக சதுரங்க வாகையாளர் 2013[தொகு]

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் நடந்த போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் தன்னை எதிர்கொண்ட நார்வேயின் கார்ல்சனிடம் சாம்பியன்ஷிப் பட்டத்தை தோற்றார்.[6]

உலக அதிவேக சதுரங்க வெற்றிவீரர்[தொகு]

அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.

சதுரங்க பதக்கங்கள்[தொகு]

 • 2003 அதிவேக சதுரங்க வெற்றிவீரர்
 • 2000 சதுரங்க வெற்றிவீரர்
 • 1987 உலக இளநிலை சதுரங்க வெற்றிவீரர், கிராஸ்மாஸ்டர்
 • 1985 இந்திய தேசிய வெற்றிவீரர் - 16 வயதில்
 • 1984 தேசிய மாஸ்டர் - 15 வயதில்
 • 1983 தேசிய இளைநிலை சதுரங்க வெற்றிவீரர், 14 வயதில்

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 100 முன்னணி ஆட்டக்காரர்கள் ஏப்ரல் 2007. அணுகப்பட்டது ஏப்ரல் 15 2007.
 2. https://ratings.fide.com/
 3. ஜனவரி 9,2014 அன்று வெளிவந்த 'தி இந்து-2013 சுவடுகள்',பக்கம்-4
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". மூல முகவரியிலிருந்து 2008-12-29 அன்று பரணிடப்பட்டது.
 5. "ஆனந்த் மீண்டும் உலக சதுரங்க சாம்பியன்". பிபிசி (மே 30,2012). பார்த்த நாள் மே 30, 2012.
 6. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=68989

வெளியிணைப்புகள்[தொகு]

விருதுகள்
முன்னர்
அலெக்சாந்தர் காலிஃப்மேன்
ஃபிடே உலக சதுரங்க வாகையாளர்
2000–2002
பின்னர்
உருசுலான் பொனமரியோவ்
முன்னர்
விளாடிமிர் கிராம்னிக்
உலக சதுரங்க வாகையாளர்
2007–13
பின்னர்
மாக்னசு கார்ல்சன்
முன்னர்
காரி காஸ்பரொவ்
உலக அதிவேக சதுரங்க வாகையாளர்
2003–2009
பின்னர்
லெவோன் அரோனியான்
சாதனைகள்
முன்னர்
வெசிலின் தோப்பலோவ்
விளாடிமிர் கிராம்னிக்
மாக்னசு கார்ல்சன்
மாக்னசு கார்ல்சன்
உலக இல. 1
1 ஏப்ரல் – 31 டிசம்பர் 2007
ரேப்ரல் – 30 செப்டம்பர் 2008
1 நவம்பர் – 31 டிசம்பர் 2010
1 மார்ச் – 30 சூன் 2011
பின்னர்
விளாடிமிர் கிராம்னிக்
வெசிலின் தோப்பலோவ்
மாக்னசு கார்ல்சன்
மாக்னசு கார்ல்சன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவநாதன்_ஆனந்த்&oldid=3294337" இருந்து மீள்விக்கப்பட்டது