அதிபன் பாசுகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதிபன் பாசுகரன்
TataSteelChess2018-11.jpg
முழுப் பெயர்அதிபன் பாசுகரன்
நாடு இந்தியா
பட்டம்கிராண்டமாஸ்டர் (2010)
பிடே தரவுகோள்2643[1] (ஆகஸ்ட் 2015 இல் அணுகப்பட்டது)

அதிபன் பாசுகரன் (Adhiban Baskaran, பிறப்பு: ஆகத்து 15, 1992) இந்தியாவைச் சேர்ந்த சதுரங்க விளையாட்டு வீரர் ஆவார். தமிழகத்தின் மயிலாடுதுறையில் பிறந்த இவர் தற்பொழுது சென்னையில் வசித்து வருகின்றார். இவர் இதுவரை இந்திய தேசிய 'பி' பிரிவு சதுரங்க சாம்பியன் பட்டத்தை 2 முறை பெற்றுள்ளார். அதோடு 2008ல் நடந்த 16 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளையோர் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்[2]. 2010 ஆகசுட்டில் செக் குடியரசில் நடந்த போட்டியில் வென்றதன் மூலம் கிராண்டமாஸ்டர் தகுதியையும் பெற்றுள்ளார்[3].

அதிபன் பாசுகரன் கிராண்டமாஸ்டர் தகுதியை பெறும் 9வது தமிழர் மற்றும் 23வது இந்தியர் ஆவார்[4].அதோடு இந்தியாவில் இருந்து மிகக் குறைந்த வயதில் இந்த தகுதியை பெற்றவரும் இவரே.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிபன்_பாசுகரன்&oldid=3312724" இருந்து மீள்விக்கப்பட்டது