மிகைல் தால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகைல் தால்
1962இல் தால்
முழுப் பெயர்இலத்துவிய: Mihails Tāls
உருசியம்: Михаил Нехемьевич Таль
நாடு
பிறப்பு(1936-01-09)சனவரி 9, 1936
ரீகா, லாத்வியா
இறப்பு28 சூன் 1992(1992-06-28) (அகவை 55)[1]
மாஸ்கோ, ருசியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1957)
உலக வாகையாளர்1960–61
உச்சத் தரவுகோள்2705 (ஜனவரி 1980)
உச்சத் தரவரிசை2 (ஜனவரி 1980)

மிகைல் நெகெமிவிச் தால் (9 நவம்பர் 1936 - 28 ஜூன் 1992) ஒரு சோவியத் லாட்விய சதுரங்க வீரர் மற்றும் எட்டாவது உலகசதுரங்க சாம்பியன் ஆவார் . அவர் சதுரங்க வரலாற்றின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகவும் சதுரங்க மேதையாகவும் கருதப்படுகிறார். தால் தாக்குதல் பாணியில் ஆடி பல ஒருங்கிணைந்த சதுரங்க தந்திரங்களை பயன்படுத்தி ஆட்டக்காரர்களை வீழ்த்துவதில் பிரசித்தி பெற்றவர்.[2][3] அவரது ஆட்டம் கணிக்க முடியாத தன்மைக்காக அறியப்பட்டது. "அவருக்கான ஒவ்வொரு விளையாட்டும் ஒரு கவிதையைப் போலவே ஒப்பிலாதது மற்றும் விலைமதிப்பிலாதது " என்று கூறப்படுகிறது.[4] மிகைலை "மிஷா" என்று பலர் சுருக்கி அழைத்தனர். அவர் "ரீகாவின் மாயாஜாலக்காரர் " என்ற புனைப்பெயரையும் பெற்றார்.

23 அக்டோபர் 1973இல் இருந்து 16 அக்டோபர் 1974 வரை ஒரு ஆட்டம் கூட தோற்காமல் 95 ஆட்டங்கள் விளையாடினார் (46 வெற்றிகள், 49 டிராக்கள்) . இதன் மூலம், சதுரங்க வரலாற்றில் தொடர்ச்சியாக அதிக ஆட்டங்கள் தோற்காமல் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை சீன கிராண்ட்மாஸ்டர் டிங் லிரன் பின்னர் முறியடித்தார். மேலும் தால் ஒரு சிறந்த சதுரங்க எழுத்தாளராகவும் அறியப்பட்டார்.

தால் 28 ஜூன் 1992 அன்று மாஸ்கோ, ரஷ்யாவில் இறந்தார். மிகைல் தால் நினைவு சதுரங்கப் போட்டி 2006 முதல் ஆண்டுதோறும் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

  1. Tal's gravestone has 27 June as the date of his death. All other sources consulted give 28 June, including Kasparov, Garry My Great Predecessors, part II, p. 382, and The Life and Games of Mikhail Tal, p. 6.
  2. Zubok, V. M. (2011) Zhivago's children: the last Russian intelligentsia, Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0674062329
  3. Clarke, P. H. (1969) Tal's Best Games of Chess, Bell, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0713502045
  4. Zubok, Vladislav. Zhivago’s Children. Harvard University Press, 2009. p. 179 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674033443
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகைல்_தால்&oldid=3938422" இலிருந்து மீள்விக்கப்பட்டது