இமானுவேல் லாசுக்கர்
இமானுவேல் லாசுக்கர் Emanuel Lasker | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | இமானுவேல் லாசுக்கர் |
நாடு | செருமனி |
பிறப்பு | திசம்பர் 24, 1868 பெர்லின்சென், புருசியா |
இறப்பு | சனவரி 11, 1941 நியூயார்க்கு நகரம், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 72)
உலக வாகையாளர் | 1894–1921 |
இமானுவேல் லாசுக்கர் (Emanuel Lasker, டாய்ச்சு ஒலிப்பு: [eˈmaːnuɛl ˈlaskɐ] ( கேட்க); திசம்பர் 24, 1868 – சனவரி 11, 1941) ஒரு செருமானிய சதுரங்க வீரரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் 27 ஆண்டுகளாக (1894-1921) உலக சதுரங்க வாகையாளராக இருந்தார். இதன் மூலம் அதிகாரபூர்வமாக இப்பட்டதை உலகிலேயே மிக அதிக ஆண்டுகள் வைத்திருந்தவர் என்ற பெருமையை பெறுகிறார். இவரது காலத்தில், லாசுக்கர் அதிக ஆதிக்கம் செலுத்திய வாகையாளர்களில் ஒருவராக இருந்தார். அத்துடன், இவர் சதுரங்க வரலாற்றின் மிக வலிமையான வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு[தொகு]
இமானுவேல் லாசுக்கர் பெர்லின்சென்னில் (தற்போது போலந்தில் உள்ள பார்லினெக்) பிறந்தார். இவர் ஒரு யூதப் பாடகரின் (அசன்) மகன் ஆவர். பதினொரு வயதில், இவர் பெர்லினில் கணிதம் படிக்க அனுப்பப்பட்டார். அங்கு தனது சகோதரர் பெர்தோல்டுடன் வசித்து வந்தார். லாசுக்கரை விட எட்டு வயது மூத்தவரான இவரது சகோதரர், இவருக்கு சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தார். 1890களின் முற்பகுதியில் உலகின் முதல் பத்து வீரர்களில் ஒருவராக பெர்தோல்ட் இருந்தார்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Jeff Sonas. "Chessmetrics Player Profile: Berthold Lasker". Chessmetrics. May 30, 2008 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- இமானுவேல் லாசுக்கர் player profile and games at Chessgames.com
- O'Connor, John J.; Robertson, Edmund F., "இமானுவேல் லாசுக்கர்", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
- கணித மரபியல் திட்டத்தில் இமானுவேல் லாசுக்கர்
- "About Lasca – a little-known abstract game". Human–Computer Interface Research. May 9, 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ஆக்கங்கள் இமானுவேல் லாசுக்கர் இணைய ஆவணகத்தில்
- Obituary of Emanuel Lasker பரணிடப்பட்டது 2016-03-15 at the வந்தவழி இயந்திரம், தி டைம்ஸ், 1941
- Articles about Emanuel Lasker by Edward Winter