ஹரிகா துரோணவல்லி
ஹரிகா துரோணவல்லி | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | ஹரிகா துரோணவல்லி |
நாடு | இந்தியா |
பிறப்பு | 12 சனவரி 1991 கொராண்ட்லா , குண்டூர் , ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
பட்டம் | கிராண்ட்மாஸ்டர் (2011) |
பிடே தரவுகோள் | 2517 (திசம்பர் 2021) |
உச்சத் தரவுகோள் | 2543 (நவம்பர் 2016) |
ஹரிகா துரோணவல்லி (பிறப்பு 12 ஜனவரி 1991) ஒரு இந்திய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் ஆவார். அவர் 2012, 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மகளிர் உலக சதுரங்க வாகையாளர் போட்டியில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார். ஹரிகாவிற்கு 2007-08 ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், அவர் சீனாவின் செங்டுவில் நடந்த பிடே மகளிர் கிராண்ட் பிரிக்ஸ் நிகழ்வை வென்று, பெண்களுக்கான பிடே உலகத் தரவரிசையில் 11ஆம் இடத்திள் இருந்து 5ஆம் இடத்தை அடைந்தார். விளாடிமிர் கிராம்னிக், ஜூடிட் போல்கர் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரை இவரது சதுரங்க முன்மாதிரிகளாகக் கருதுகிறார். [1] விளையாட்டுத் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவருக்கு பத்மஸ்ரீ விருது 2019ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. [2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
ஹரிகா, 12 ஜனவரி 1991 அன்று, திரு. ரமேஷ்-திருமதி. ஸ்வர்ணா துரோணவல்லி தம்பதிக்கு குண்டூரில் பிறந்தார். அங்கு அவர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பால குடீர் பள்ளியில் பயின்றார். அவரது தந்தை ரமேஷ், மங்களகிரியில் உள்ள பஞ்சாயத்து சபை உட்பிரிவில் துணை நிர்வாகப் பொறியாளராகப் பணிபுரிகிறார். சிறு வயதிலேயே சதுரங்க விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட ஹரிகா, 9 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய வாகையாளர் போட்டியில் பதக்கம் வென்றார். அதைத் தொடர்ந்து 10 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக இளையோர் சதுரங்கவாகையாளர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அச்சமயம் பயிற்சியாளர் என்.வி.எஸ்.ராமராஜுவை அணுகி, அவரின் உதவியோடு தனது விளையாட்டை மேலும் செம்மைப்படுத்தினார். இவர் கிராண்ட்மாஸ்டர் ஆன இரண்டாவது இந்தியப் பெண்மணி ஆவார் (கோனேரு ஹம்பிக்குப் பிறகு).
ஆகஸ்ட் 2018 இல் ஹைதராபாத்தைச் சேர்ந்த கார்த்திக் சந்திராவை ஹரிகா மணந்தார்.[3] அவரது சகோதரி, தெலுங்கு திரைப்பட இயக்குநர் கே. எஸ். ரவீந்திரரை மணந்துள்ளார்.[4]
குறிப்புகள்[தொகு]
- ↑ PowerPlayChess (14 August 2014). "Olympiad Tromsø 2014 - A quick chat with Harika Dronavalli". https://www.youtube.com/watch?v=Q3a4j6Bx-78.
- ↑ "Here is the complete list of Padma awardees 2019- The New Indian Express" இம் மூலத்தில் இருந்து 2019-01-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190126220722/http://www.newindianexpress.com/nation/2019/jan/26/heres-the-complete-list-of-padma-awardees-2019-1930046.html.
- ↑ https://www.chess.com/news/view/harika-dronavallis-wonderful-wedding
- ↑ Jain, Rupam (7 June 2015). "I am uncool, but I'm cool with that: Dronavalli Harika". https://timesofindia.indiatimes.com/sports/chess/i-am-uncool-but-im-cool-with-that-dronavalli-harika/articleshow/47574020.cms.