கொனேரு ஹம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொனேரு ஹம்பி
Koneru Humpy
HumpyKoneru.jpg
2012-இல் கோனேரு ஹம்பி
நாடுஇந்தியா
பிறப்பு31 மார்ச்சு 1987 (1987-03-31) (அகவை 34)
குடிவாடா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பட்டம்Grandmaster (2002)
பிடே தரவுகோள்2586 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2623 (சூலை, 2009)
பதக்க சாதனைகள்
 இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Doha[Chess at the 2006 Asian Games மகளிர், தனிநபர் சுற்று
தங்கப் பதக்கம் – முதலிடம் 2006 Doha[Chess at the 2006 Asian Games கலப்புக்குழு சுற்று

கொனேரு அம்பி (Koneru humpy) (பிறப்பு: மார்ச் 31, 1987) ஆந்திராவின் விஜயவாடாவைச் சேர்ந்த, ஓர் இந்திய சதுரங்க வீராங்கனை ஆவார். மேலும், இவ்விளையாட்டின் விரைவான ஆட்ட வாகையாளர் என்ற பிரிவில் உலக சாம்பியன் ஆவார்.[1] 2002 ஆம் ஆண்டு, 15 வயதில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்து, உலக சதுரங்க வரலாற்றில், மிக இளம் வீராங்கனை என்ற வரலாற்றை உருவாக்கினார். ஆண்களின் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அடைந்த, முதல் இந்திய பெண்மணியும் இவரே ஆவார்.[2] 2006 தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக, தனிப்பட்ட போட்டியில் தங்கத்தை வென்ற இவர், கலப்பு அணியிலும் இணைந்து விளையாடிபோது, அவரின் அணி தங்கம் வென்றது.[3]

பெண்கள் கிராண்ட் மாஸ்டர் விருது[தொகு]

அதிவேகமாக காய்களை நகர்த்தி விளையாடக்கூடிய உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ருசியா நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. இதன் பெண்கள் பிரிவு போட்டி 12 ரவுண்ட் கொண்டதாகும். 122 வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி, கடைசி ரவுண்டில் சீனாவின் டான் ஜோங்கியை வீழ்த்தி, டிசமபர் 2019-இல் பெண்கள் பிரிவின் கிராண்ட் மாஸ்டர் விருதை வென்றார்.[4][5]

விருதுகள்[தொகு]

2003 ஆம் ஆண்டில் இந்திய அரசு, விளையாட்டில் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக அருச்சுனா விருது அளித்தது. மேலும், 2007ஆம் ஆண்டு, இந்திய அரசின் உயர்ந்த குடி விருதான, பத்மாஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். பத்மஸ்ரீ விருது பெற்ற பொழுது, இவருக்கு 20 வயது கூட இல்லை.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொனேரு_ஹம்பி&oldid=3306839" இருந்து மீள்விக்கப்பட்டது