ஜூடிட் போல்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூடிட் போல்கர்
ஜூடிட் போல்கர் , 2008இல்
முழுப் பெயர்ஜூடிட் போல்கர்
நாடுஅங்கேரியா
பிறப்பு23 சூலை 1976 (1976-07-23) (அகவை 47)
புடாபெஸ்ட், அங்கேரிய மக்கள் குடியரசு
பட்டம்கிராண்ட்மாஸ்டர் (1991)
பிடே தரவுகோள்2675 (திசம்பர் 2021) (#ஆகத்து 2014 இல் , உலக தரவரிசைப்பட்டியலில் 65ஆம் இடம் மற்றும் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் FIDE World Rankings)
உச்சத் தரவுகோள்2735
(#சூலை 2005 இல் , உலக தரவரிசைப்பட்டியலில் 8 ஆம் இடம் மற்றும் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடம் FIDE World Rankings)

ஜூடிட் போல்கர் (Judit Polgár, பிறப்பு : சூலை 23 , 1976 ) ஒரு அங்கேரிய சதுரங்க கிராண்ட்மாஸ்டர் . சதுரங்க விளையாட்டின் வரலாற்றில் உறுதியான பெண் வீரர் என்று கருதப்படுகிறார் .[1] 1991 ஆம் ஆண்டில், போல்கர் , கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றதன் மூலம், பாபி ஃபிஷர்ரின் சாதனையை முறியடித்து மிக இளம் வயதில் அப்பட்டத்தை பெற்றவர் என்கிற பெருமையைப் பெற்றார். 15 ஆண்டுகள் நிறைவடைந்து நான்கு மாதங்கள் இருக்கையில் அப்பட்டதைப் பெற்றார். 2005 இல் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றதன் மூலம், அப்போட்டிகளுக்கு தகுதி பெற்ற ஒரே பெண் ஆனார். 2700 எலோ தரவுகோளைத் தாண்டிய முதலாவது பெண் ஆவார். இது வரையிலும் இந்த சாதனையை செய்த ஒரே பெண்ணும் இவரே. 1989ஆம் ஆண்டு முதல் மகளிர் தரவரிசைப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். மாக்னசு கார்ல்சன், அனத்தோலி கார்ப்பொவ், காரி காஸ்பரொவ், போரிஸ் ஸ்பாஸ்கி, வசிலி ஸ்மிசுலோவ், வெசலின் டோபலோவ்,விசுவநாதன் ஆனந்த், ருஸ்லான் போனோமரியோவ் உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்களை இவர் வென்றுள்ளார் .[2] ஆகஸ்ட் 13, 2014 அன்று, சதுரங்க போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் .[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sources citing Polgár as by far the strongest female chess player of all time:
  2. "Judit Polgár". Judit Polgár. http://www.polgarjudit.com/. பார்த்த நாள்: Feb 10, 2014. 
  3. http://en.chessbase.com/post/judit-polgar-to-retire-from-competitive-chess
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூடிட்_போல்கர்&oldid=3581059" இருந்து மீள்விக்கப்பட்டது