மல்லிகா சீனிவாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகா சீனிவாசன்
Mallika Srinivasan
பிறப்பு1959
ஆழ்வார்க்குறிச்சி, திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
இருப்பிடம்சிவகாசி, தமிழ் நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் - திருச்சி சென்னைப் பல்கலைக்கழகம்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
பணிIndustrialist
அமைப்பு(கள்)TAFE - Tractors and Farm Equipment Limited
பட்டம்Chairperson & CEO, TAFE
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
டாட்டா ஸ்டீல்
டாட்டா தேனீர் and AGCO
பெற்றோர்A. Sivasailam
Indira Sivasailam
வாழ்க்கைத்
துணை
வேணு சீனிவாசன்
வலைத்தளம்
TAFE.com

மல்லிகா சீனிவாசன் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். டாபே (TAFE - Tractors and Farm Equipment Limited) எனும் டிராக்டர் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராகவும், தலைமைச் செயலதிகாரியாகவும் உள்ளார். டிராக்டர் உற்பத்தி எண்ணிக்கையில் பார்க்கும்போது உலக அளவில் மூன்றாவது இடத்திலும், இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும் இந்நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனத்தின் டிராக்டர்கள் 82 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு மல்லிகா சீனிவாசன் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக நியமிக்கப்பட்டார். தனியார் திறையின் தலைவராக உள்ள ஒருவர் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[1]

பெற்ற விருதுகளும், சிறப்புகளும்[தொகு]

பத்மசிறீ விருது, 2014 [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_சீனிவாசன்&oldid=3597781" இலிருந்து மீள்விக்கப்பட்டது