ஔவை நடராசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஔவை நடராசன்
பிறப்புசிவபாத சேகரன்
24 ஏப்ரல் 1936
செய்யாறு,
வட ஆற்காடு மாவட்டம்,
சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா
(தற்போது திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு21 நவம்பர் 2022(2022-11-21) (அகவை 86)[1]
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இனம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
கல்விமுதுகலை (தமிழ்), முனைவர்
பணிவேந்தர்
பணியகம்பாரத் பல்கலைக்கழகம், சென்னை
அறியப்படுவதுதமிழறிஞர், பேச்சாளர்
பட்டம்பத்மசிறீ
பெற்றோர்ஔவை துரைசாமி (தந்தை), லோகாம்பாள் (தாய்)
வாழ்க்கைத்
துணை
மருத்துவர் தாரா நடராசன்
பிள்ளைகள்கண்ணன் நடராசன், அருள் நடராசன், பரதன் நடராசன்
உறவினர்கள்சகோதரர்கள்-4, சகோதரிகள்-4
விருதுகள்பத்மசிறீ விருது 2010, கலைமாமணி விருது
வலைத்தளம்
http://www.avvainatarajan.com/home

ஔவை து. நடராசன் (Avvai D.Natarajan; 24 ஏப்ரல் 1936 – 21 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், கல்வியாளர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் ஆவார். ஆங்கிலத்திலும், தமிழிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்றுள்ளார்.

பிறப்பு[தொகு]

தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் லோகாம்பாள் - ஒளவை துரைசாமி இணையருக்கு மகனாக 24 ஏப்ரல் 1936 அன்று பிறந்தார் நடராசன்.[2] இவர் தந்தை நற்றிணை, சிலப்பதிகாரம், திருவருட்பா உள்ளிட்ட பல பனுவல்களுக்கு உரை எழுதியமையால் 'உரைவேந்தர்' என அழைக்கப்பெற்றவர். புகழ்பெற்ற மருத்துவர் மெய்கண்டான் உள்ளிட்ட 10 பேர் நடராசனின் உடன்பிறப்புகள் ஆவர்.

கல்வி[தொகு]

மதுரை தியாகராசர் கல்லூரியில் பயின்று தமிழில் முதுகலைப் பட்டம் (Master of Arts) பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.[2][3] தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகளிலும் சிறப்பாகப் பேசும் திறன் கொண்டவர்.

பணிகள்[தொகு]

மதுரை தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, புதுதில்லியிலுள்ள அனைத்திந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளர், அறிவிப்பாளர் எனப் பணியாற்றினார். அதன் பின்னர் சென்னையிலுள்ள காந்தி ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

தமிழ்நாட்டு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநராக 1975 முதல் 1984 வரை பணியாற்றினார்[2] பின்னர் 1984 முதல் 1992 வரை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறைச் செயலாளராகப் பணியாற்றினார்.[4] இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இல்லாமல் தமிழ்நாட்டு அரசுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவரே..

16 திசம்பர் 1992 முதல் 15 திசம்பர் 1995 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பினை வகித்தார்.[2][4][5] அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார்.[6][7] 2015 முதல் சென்னையிலுள்ள பாரத் பல்கலைக்கழக வேந்தராகப் பணியாற்றினார்.[8]

படைப்புகள்[தொகு]

நடராசனின் சொற்பொழிவுகள் சில நூல்களாக வெளிவந்துள்ளன. அவை;

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
1966 வாழ்விக்க வந்த வள்ளலார்[9] சேகர் பதிப்பகம்
1992 Art Panaroma of Tamils

(இணை ஆசிரியர் - நடன காசிநாதன்)

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு
2005? கம்பர் விருந்து
? கம்பர் மாட்சி
? பேரறிஞர் அண்ணா
? திருப்பாவை விளக்கம்
? திருவெம்பாவை விளக்கம்
? சங்க இலக்கிய பெண்பாற் புலவர்கள்
? அருளுக்கு அவ்வை சொன்னது
? Self Confidence
? Saying of Stalwart
? Thirukkovaiyar

பங்கேற்ற நிகழ்ச்சிகள்[தொகு]

சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அனைத்து நாடுகளின் கவிஞர்கள் மாநாட்டில் (1982) தமிழ்நாட்டின் சார்பாகப் பங்கேற்றார் .[சான்று தேவை]

மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டின் (1981) பொதுச்செயலாளராகச் செயலாற்றினார்.[10]

மொரிசியசில் நடைபெற்ற ஏழாம் உலகத் தமிழ் மாநாட்டின் (1989) குழுவில் உறுப்பினராக இருந்தார்.[10]

தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் மருத்துவத் தொழில்நுட்ப சொல்லாக்கர் குழுத் துணைத்தலைவராகப் பங்கேற்று சிறப்பித்திருக்கிறார்.[சான்று தேவை]

29 நவம்பர் 2006 அன்று நடைபெற்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக இரண்டாவது பட்டமளிப்பு விழாவில், விழாப் பேருரையாற்றினார்.

விருதுகள்[தொகு]

ஆண்டு விருது முகமை
2009 கலைமாமணி விருது தமிழ்நாட்டு அரசு

(தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்)

2010 பேரறிஞர் அண்ணா விருது தமிழ்நாட்டு அரசு (தமிழ் வளர்ச்சித் துறை)
2011 பத்மசிறீ விருது[11] இந்திய அரசு
2012 கம்பன் புகழ் விருது கொழும்பு கம்பன் கழகம் (இலங்கை)
2012 (?) தன்னேரில்லாத தமிழ் மகன் விருது கம்பர் கழகம் (இலங்கை)
2014 சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது தினத்தந்தி நாளிதழ்

மறைவு[தொகு]

ஔவை நடராசன் தமது 87வது அகவையில் 21 நவம்பர் 2022 அன்று சென்னையில் காலமானார்[12].[13] தமிழ்நாட்டுக் காவல்துறை மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றபின் அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

புகழ்[தொகு]

நடராசன், பச்சையப்பன் கல்லூரி மாணவராக விளங்கியபோதிலேயே இவரது சொல்லாற்றல் கண்டுவியந்த கவிஞர் சுரதா, இவரைப் 'பாதி அண்ணா ” என்று பாராட்டினார்.[14]

"ஔவை நடராசன் அவர்கள் அரசியலில் நுழைந்திருந்தால் அண்ணாவின் தம்பிகளுக்குப் போட்டியாக அமைந்திருப்பார். நடிப்பில் ஈடுபட்டிருந்தாலும் சிவாசி கணேசனுக்கு அடுத்த நிலையைப் பெற்றிருப்பார். இந்திய ஆட்சிப் பணித் தேர்வு எழுதியிருந்தால் தமிழ்நாட்டின் தலைசிறந்த செயலாளராகத் திகழ்ந்திருப்பார். ஆனால் ஆசிரியப்பணிக்கு வந்துள்ளதால், நமக்கெல்லாம் தலைசிறந்த ஊக்க ஊற்றாக விளங்குகிறார்" என்று தன் மாணவப்பருவத்தில் தன் உடன் மாணவர்களிடம் கூறினார் மறைமலை இலக்குவனார்.[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  2. 2.0 2.1 2.2 2.3 தினத்தந்தி 2014 செப் 26
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  4. 4.0 4.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  5. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  6. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  7. விடுதலை நாளிதழ் செய்தி[தொடர்பிழந்த இணைப்பு]
  8. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  9. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  10. 10.0 10.1 Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  11. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  12. பா, கனிமொழி, தொகுப்பாசிரியர் (2019-06-03). வாழும் தமிழ். doi:10.26524/vt19. http://dx.doi.org/10.26524/vt19. 
  13. தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்
  14. 14.0 14.1 Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஔவை_நடராசன்&oldid=3788480" இருந்து மீள்விக்கப்பட்டது