தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தலைமையகம்தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ் சாலை, எழும்பூர், சென்னை
தலைமையகம்
சேவை
தமிழ்நாடு
தாய் அமைப்பு
தமிழ்நாடு அரசு
வலைத்தளம்tnarch.gov.in

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 1961 இல் தொடங்கப்பட்டது. இத்துறை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஆல்ஸ் சாலையில் தமிழ்வளர்ச்சி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் இயங்கி வருகிறது.[1]இத்துறையின் முதலாவது இயக்குனர் ஆர். நாகசாமி ஆவார். தற்போதைய இயக்குனர் நடன காசிநாதன் ஆவார்.

வரலாற்றிற்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரையில் 33 இடங்களில் தமிழக அரசின் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொண்டுள்ளது.[2]

பணிகள்[தொகு]

  • தமிழ்நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பாதுகாத்தல்.
  • வரலாற்று தளங்களில் அகழ்வாராய்ச்சி நடத்துதல்.
  • அருங்காட்சியகத்தில் உள்ள கலைப்பொருட்களை இரசாயனப் பாதுகாப்பு மேற்கொள்ளுதல்.
  • கல்வெட்டுகளை நகலெடுத்தல், கல் கல்வெட்டுகளில் உள்ளவற்றை அச்சிடுதல், மற்றும் புத்தக வடிவில் அவற்றை வெளியிடுதல்.[3]

நிர்வாக அமைப்பு[தொகு]

தொல்லியல் துறையானது தொல்லியல் துறை ஆணையரின் தலைமையின் கீழ், துணை இயக்குநர், தொல்லியல் துணை கண்காணிப்பாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி கண்காணிப்பு கல்வெட்டாய்வாளர், மண்டல உதவி இயக்குநர்கள், காப்பாட்சியர்கள், கல்வெட்டாய்வாளர்கள், தொல்லியல் அலுவலர்கள், வரலாற்றுக்கு முந்தைய கால அகழாய்வாளர் மற்றும் அகழாய்வாளர் ஆகியோரைக் கொண்டு இயங்கி வருகின்றது.[4]

அலுவலகங்கள்[தொகு]

தமிழ்நாட்டில் இத்துறைக்கு சென்னை, சிதம்பரம், மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்புத்தூர், நாகர்கோவில், தர்மபுரி ஆகிய எட்டு இடங்களில் மண்டல அலுவலகங்கள் உள்ளன.[5]

தொல்லியல் இரசாயன ஆய்வுக்கூடம்[தொகு]

இங்கு 1980 முதல் தொல்லியல் இரசாயன ஆய்வுக்கூடம் இயங்கி வருகிறது. நினைவுச் சின்னங்கள், வெண்கலப் படங்கள், செப்பு தகடுகள், நாணயங்கள், சுடுமண், ஸ்டக்கோ மற்றும் ஓவியங்கள் போன்ற பழமையான பொருட்கள் இரசாயனம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.[6]

நூலகம்[தொகு]

இங்குள்ள நூலகத்தில் தொல்லியல், மானிடவியல், கலை, வரலாறு, கல்வெட்டியல் தொடர்பான புகழ்பெற்ற வெளிநாட்டு மற்றும் இந்திய அறிஞர்கள் மற்றும் நிபுணர்கள் எழுதியுள்ள 11,500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.[7]

கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம்[தொகு]

தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்வெட்டு ஆராய்ச்சி நிறுவனம் (Institute of Epigraphy) கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வில் முதுகலை டிப்ளமா (Post Graduate Diploma in Epigraphy, Archaeology, Excavation) ஆகிய படிப்புகளை வழங்கி வருகிறது.[1]

பராமரிக்கும் அரண்மனைகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "கல்வெட்டுகளை ஆராய ஒரு படிப்பு". தமிழ் இந்து. http://m.tamil.thehindu.com/general/education/கல்வெட்டுகளை-ஆராய-ஒரு-படிப்பு/article6162767.ece. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Excavations". 2017-10-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-09-19 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The State Department of Archaeology". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணையதளம். Archived from the original on 2016-11-29. https://web.archive.org/web/20161129114439/http://www.tnarch.gov.in/aboutus.htm. 
  4. கொள்கை விளக்கக் குறிப்பு-கலை மற்றும் பண்பாடு அருங்காட்சியங்கள், தொல்லியல் துறை 2019-2020
  5. "District Archaeological Offices". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணையதளம். Archived from the original on 2017-01-03. https://web.archive.org/web/20170103154121/http://www.tnarch.gov.in/dtoffice.htm. 
  6. "Chemical Laboratory - Conservation & Preservation". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணையதளம். Archived from the original on 2017-01-29. https://web.archive.org/web/20170129184439/http://www.tnarch.gov.in/lab.htm. 
  7. "library". தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணையதளம். Archived from the original on 2016-11-30. https://web.archive.org/web/20161130004328/http://www.tnarch.gov.in/lib.htm. 

வெளியிணைப்புகள்[தொகு]