சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் இதழியல் முன்னோடிகளில் ஒருவரும் தமிழ் தினசரி நாளிதழான தினத்தந்தியின் நிறுவனரான சி. பா. ஆதித்தனார் நினைவாக தினத்தந்தி குழுமத்தால் வழங்கப்படுவது சி.பா. ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது ஆகும். தமிழ் இலக்கியத்தின் முன்னேற்றத்திற்காக இரு பிரிவுகளாக வருடந்தோரும் தினத்தந்தி குழுமத்தால் வழங்கப்படும் விருதுகளில் முதன்மையானது தமிழ் இலக்கியத்துக்கு அருந்தொண்டாற்றி வரும் மூத்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு ரூ.3 லட்சமும் ரொக்கமாக கொடுக்கப்படும் இவ்விருதாகும். இன்னொன்று , சிறந்த தமிழ் இலக்கிய நூலுக்கு ரூ.2 லட்சம் ரொக்கமாக வழங்கும் விருதாகும். மொத்தம் ரூ.5 லட்சம் பரிசு தமிழ் இலக்கிய முன்னேற்றத்திற்கும் பங்களிப்பிற்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆதித்தனாரின் பிறந்தநாளன்று இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.[1] "மூத்த தமிழறிஞர்" என்ற பெயரில் இவ்விருது குறிப்பிடப்படுகிறது.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு பெறுநர் குறிப்பு
2017 ஈரோடு தமிழன்பன் இந்தியப் பிரதமர் மோடியால் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
2016 முனைவர் அருகோ[2]
2015 பெருங்கவிக்கோ வ. மு. சேதுராமன் நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் சென்னை ராணி சீதை மன்றத்தில் நடந்த விழாவில் வழங்கினார்.
2014 முனைவர் அவ்வை நடராசன் சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் வைத்து சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர். இரா.தாண்டவன் அவர்களால் வழங்கப்பட்டது.
2013 ச. வே. சுப்பிரமணியன் குஜராத் உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி பு. ரா. கோகுலகிருஷ்ணன் அவர்களால் சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
2012 பொன்னீலன்[3]
2011 குமரி அனந்தன்[4]
2010 வா. செ. குழந்தைசாமி சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவகர் அவர்களால் சென்னையில் வழங்கப்பட்டது.[5]
2009 சிலம்பொலி செல்லப்பன்[6]
2004 எம். ஆர்.பி. குருசாமி[7]


மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆதித்தனார் இலக்கிய பரிசு,".
  2. "முனைவர்கள் அருகோ, தாயம்மாள் அறவாணனுக்கு ரூ.5 லட்சம் இலக்கியப் பரிசு: தினத்தந்தி நாளை வழங்குகிறது". மாலைமலர். https://www.maalaimalar.com/News/District/2016/09/26073405/1041272/literary-prize-of-Rs-5-lakh-dinathanthi-provides-tomorrow.vpf. பார்த்த நாள்: 21 January 2019. 
  3. "Ponneelan bags Adithanar Award". IBN Live இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140928151130/http://ibnlive.in.com/news/ponneelan-bags-adithanar-award/296190-60-120.html. பார்த்த நாள்: 28 September 2014. 
  4. "Daily Thanthi award for Kumari Ananthan". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  5. "kulandaiswamy Awards". kulandaiswamy.com. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  6. "ஆதித்தனார் இலக்கிய பரிசு,". https://tamil.oneindia.com/art-culture/essays/2009/0926-athithanar-award-for-silamboli-vezhaventhan.html. 
  7. "Adithanar awards for Tamil scholar, poet". The Hindu இம் மூலத்தில் இருந்து 28 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140928151105/http://www.thehindu.com/2004/09/28/stories/2004092813770300.htm. பார்த்த நாள்: 28 September 2014.