திருவண்ணாமலை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திருவண்ணாமலை மாவட்டம்
TN Districts Tiruvannamalai.png
திருவண்ணாமலை மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் திருவண்ணாமலை
மிகப்பெரிய நகரம் திருவண்ணாமலை
ஆட்சியர்
கன்தசாமி இ.ஆ.ப
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ஏ.ஜி. பாபு [1]
ஆக்கப்பட்ட நாள் 30.09.1989
பரப்பளவு 6312 கி.மீ² (190வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
36,05,000 (4வது)
618/கி.மீ²
வட்டங்கள் 12
ஊராட்சி ஒன்றியங்கள் 18
நகராட்சிகள் 4
பேரூராட்சிகள் 10
ஊராட்சிகள் 860
வருவாய் கோட்டங்கள் 2
www.tiruvannamalai.tn.nic.in

திருவண்ணாமலை மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் வேங்கிக்கால் ஆகும்.

வரலாறு[தொகு]

1989 ஆண்டு வட ஆற்காடு மாவட்டம் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் மற்றும் வடஆற்காடு அம்பேத்கர் மாவட்டங்களாகப் பிரிக்கப் பெற்றன. பின்னர் 1996 ஆம் ஆண்டின் மாவட்டப் பெயர் மாற்றங்களுக்கு பின் திருவண்ணாமலை மாவட்டமானது.

புவியியல் மற்றும் மக்கள் வகைப்பாடு[தொகு]

திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டத்தினாலும், வடக்கே வேலூர் மாவட்டத்தினாலும், தெற்கே விழுப்புரம் மாவட்டத்தினாலும் மற்றும் மேற்கே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களாலும் சூழப்பெற்ற 6191 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட 28 வது மாவட்டமாகும். 2001 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2,186,125 மக்கள்தொகை கொண்ட இம்மாவட்டம் 18.33 % நகர்புறமாகப் பெற்றது. கல்வியறிவு விகிதத்தில் இம்மாவட்டம் 78.22% ஆகும்.

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

15-வது சட்டமன்ற தொகுதி

தொகுதி வேட்பாளர் கட்சி
கலசப்பாக்கம் பன்னீர் செல்வம் அதிமுக
ஆரணி சுப்புரமணியன் அதிமுக
திருவண்ணாமலை எ.வ.வேலு திமுக
கீழ்பெண்ணாத்தூர் கு. பிச்சாண்டி திமுக
வந்தவாசி அம்பேத்குமார் திமுக
போளூர் ரமேஷ் திமுக
செங்கம் மு.பெ.கிரி திமுக
செய்யாறு தூசி மோகன் அதிமுக

0

உழவுத் தொழில்[தொகு]

நெல் சாகுபடி மற்றும் அரிசி பதனிடுதல் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தொழில் ஆகும். பதினெட்டு சிறு அணைகள் மற்றும் 1965 ஏரிகளின் மூலம் சுமார் 112013 ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யபடுகிறது. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் தனியார் நெல் மண்டிகள் மாவட்டம் பரவியுள்ளன. அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் மூலம் 2007 ஆம் ஆண்டில் 271411 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. செய்யாறு நகருக்கு அருகிலுள்ள அரசு நெல் அரவை ஆலை மாவட்டத்திலேயே பெரிய அரிசி ஆலை ஆகும். ஆரணி மற்றும் போளூர் வட்டங்களில் சுமார் 278 அரிசி ஆலைகள் உள்ளன. களம்பூர் பொன்னி என்னும் ஒரு வகை அரிசி இம்மாவட்டத்தின் களம்பூர் என்னுமிடத்தில் தயாரிக்கப்படும் புகழ் பெற்ற அரிசி வகை ஆகும். நெற் சாகுபடி தவிர, கரும்பு சாகுபடியும் சிறந்து விளங்குகிறது. செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, இந்தியாவின் பெரிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்று ஆகும்.

நெசவுத் தொழில்[தொகு]

மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய தொழில் பட்டு நெசவு ஆகும்.ஆரணி பட்டு பிரசித்தி பெற்றது ஆகும். கைத்தறி பட்டு நெசவு தவிர விசைத்தறி பருத்தி ஆடைகளும் நெய்யப்படுகின்றன.

சுற்றுலா[தொகு]

மாவட்டத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களுள் ஒன்று. இந்நகரில் உள்ள அருள் மிகு அண்ணாமலையார் கோவிலும், இரமண மகரிஷி ஆசிரமமும் உலகப் புகழ் பெற்றவை. திரு அண்ணாமலை பஞ்சபூத தலங்களுள் ஒன்று. இங்கு இறைவர் நெருப்பின் வடிவில் வணங்க பெறுகிறார். பௌர்ணமி கிரிவலம் தமிழ் நாட்டில் புகழ் பெற்று வருகிறது. ஜவ்வாது மலைத் தொடர் மற்றும் அதைச் சுற்றி உள்ள நிர்வீழ்ச்சிகள் மற்றும் வனம் சுற்றுலா மற்றும் கோடைஸ்தலமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள சாத்தனூர் அணை புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். செய்யாறு நகரில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலமான வேதபுரிஸ்வரர் ஆலயம், வந்தவாசிக்கு அருகில் தென்னாங்குரிலுள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ஆலயம், ஆரணி கோட்டை, தேவிகாபுரம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் ஆலயம் மற்றும் அருள்மிகு கனககிரிஸ்வர் மலைக்கோயில், ஆரணிக்கு அருகில் விஜய நகரில் உள்ள கோட்டை மற்றும் மாளிகை ஆகியவை முக்கிய சுற்றுலாத் தலங்களாகும்.

கோயில் சொத்துகள்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு கீழ் வரும் கோயில் சொத்தின் பரப்பளவு 1967.05 ஹெக்டேர்[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. தினமணி செய்தி 7 மாவட்டங்களுக்கு புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்
  2. http://tnhrce.org.in/a_reg/Tiruvannamalai/District%20Koil%20Land%20Abstract.xls
  3. http://tnhrce.org/areg.html

வெளி இணைப்புகள்[தொகு]