ஆதமங்கலம் புதூர்

ஆள்கூறுகள்: 12°33′22″N 78°56′24″E / 12.556°N 78.94°E / 12.556; 78.94
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆதமங்கலம் புதூர்
சாமிநாதவுடையார் நல்லூர்
—  நகரியம்  —
ஆதமங்கலம் புதூர்
சாமிநாதவுடையார் நல்லூர்
இருப்பிடம்: ஆதமங்கலம் புதூர்
சாமிநாதவுடையார் நல்லூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°33′22″N 78°56′24″E / 12.556°N 78.94°E / 12.556; 78.94
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. முருகேஷ், இ. ஆ. ப [3]
நகரியத் தலைவர் வெ.ந . சாமிநாத உடையார் (அண்ணா தி.மு.க )
ஆணையர்
மக்கள் தொகை

அடர்த்தி

19,000 (2001)

6,333/km2 (16,402/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.0 சதுர கிலோமீட்டர்கள் (1.2 sq mi)

134 மீட்டர்கள் (440 அடி)

குறியீடுகள்

ஆதமங்கலம் புதூர் (ஆங்கிலம்:Adamangalam pudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் ( முன்பு : போளூர் வட்டம்) உள்ள ஒரு நகரியம் ஆகும்.

நகரியத்திற்குட்பட்ட ஊர்கள் (அ) பகுதிகள்[தொகு]

  • ஊர் = ஆதமங்கலம் புதூர்

பகுதிகள் = பஜார் , கோவில் தெரு ,

ஏரித்தெரு, பாடசாலை தெரு

  • ஊர் = வெங்கிட்டம்பாளையம்

பகுதிகள் = பாளையம்(ஊர்) , கோட்டை ,

  • ஊர் = கேட்டவரம்பாளையம்

பகுதிகள் = பெரிய பாளையம் , சின்ன பாளையம் ,

மக்கள் தொகை[தொகு]

இந்த ஊரில் ஏறத்தாழ 19,000 மக்கள் வாழ்கிறார்கள் . இதில் ஆதமங்கலம் புதூரின் மக்கள் தொகை 8,000 ஆகும். கேட்டவரம் பாளையத்தில் 6,000 மக்கள் , வெங்கிட்டம்பாளையத்தில் 5,000 மக்கள் இருக்கிறார்கள் .அனைத்து பகுதிகளிலும் அகமுடையார் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

சிறப்பு[தொகு]

மாடு விடு திருவிழா[தொகு]

வடமாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாடுவிடு திருவிழா , ஆதமங்கலம் புதூரில் சிறப்புப் பெற்றது ஆகும். பொங்கல் பண்டிகையின் போது நடக்கும் இத்திருவிழா 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும்.இது அங்கு பெரும்பான்மையாக உள்ள அகமுடையார் சமுதாய மக்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

குருவட்டம்[தொகு]

ஆதமங்கலம் புதூர் வருவாய் குருவட்டடின் தலைமையகம் ஆதமங்கலம் புதூரே ஆகும் . மேலும் புகழ் பெற்ற பர்வத மலைக்குப் பின்புறம் தான் இந்த நகரம் உள்ளது .

குருபூசை:

இங்கு பெரும்பான்மையாக உள்ள அகமுடையார் சமுதாய மக்கள் மற்றும் இளைஞர்களால் வருடந்தோறும் அக்டோபர் 27 ல் முதல் சுதந்திர போராட்ட கிளர்ச்சிக்கு காரணமான மாமன்னர் மருதுபாண்டியர்கள் மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரி நிறுவி,பல கோவில் அறப்பணிகளுக்கு வித்திட்ட பச்சையப்ப முதலியார் ஆகியோரின் குருபூசை விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாட படுகிறது.

கோவில்[தொகு]

பஜாரில் உள்ள அம்மன் கோவில் பெரியது . கொடி மரம் , ராஜ கோபுரம் ஆகியவற்றுடன் கூடிய தலம் ஆதமங்கலம் ஆகும் . மேலும் , ஆதமங்கலம் புதூரில் ராமர் கோவில் அமைந்துள்ளது,(ஆதமங்கலம் புதூர் வெற்றிலைக் காரஅகமுடையார் வகையறாக்கு பாத்தியப்பட்டது. ) பெரியபாளையத்தில் உள்ள ராமர் கோவிலும் பழமையானது .

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதமங்கலம்_புதூர்&oldid=3255823" இருந்து மீள்விக்கப்பட்டது