வெம்பாக்கம் வட்டம்
வெம்பாக்கம் வட்டம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின் 12 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] செய்யார் வட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு வெம்பாக்கம் வட்டம், மே 2012ல் நிறுவப்பட்டது. [2]வெம்பாக்கம் வட்டம் 91 வருவாய் கிராமங்கள் கொண்டது.[3]இவ்வட்டத்தில் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
அமைவிடம்
[தொகு]வெம்பாக்கம் வட்டத்தின் வடக்கிலும், மேற்கிலும் இராணிப்பேட்டை மாவட்டமும், கிழக்கில் காஞ்சிபுரம் மாவட்டம், தெற்கில் செய்யார் வட்டமும் எல்லைகளாக உள்ளது.
மாவட்டத் தலைமையிடம் திருவண்ணாமலைக்கு வடகிழக்கே, தேசிய நெடுஞ்சாலை எண் 38 வழியாக 116 கிமீ தொலைவிலும்; காஞ்சிபுரத்திலிருந்து 16.6 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 96 கிமீ தொலைவிலும் வெம்பாக்கம் உள்ளது. [4]
குறுவட்டங்கள்
[தொகு]வெம்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு நான்கு குறுவட்டங்கள் செயல்படுகிறது. வெம்பாக்கம், தூசி, நாட்டேரி, பெருங்கட்டூர்.[[2]]
வருவாய் கிராமங்கள்
[தொகு]வெம்பாக்கம் வருவாய் வட்டம் 91 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 1,24,188 ஆகும். அதில் 61,094 ஆண்களும், 63,094 பெண்களும் உள்ளனர் 43566 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். [[3]]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்
- ↑ Kilpennathur to become 11th taluk of Tiruvannamalai district
- ↑ வெம்பாக்கம் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ [1]