கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி | |
மாவட்டம் | |
![]() கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை | |
![]() கள்ளக்குறிச்சி மாவட்டம்:அமைந்துள்ள இடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | கள்ளக்குறிச்சி |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
சர்வன்குமார் சடாவத், இ. ஆ. ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
பகலவன் இ. கா. ப |
நகராட்சிகள் | 3 |
வருவாய் கோட்டங்கள் | 2 |
வட்டங்கள் | 6 |
பேரூராட்சிகள் | 5 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 9 |
ஊராட்சிகள் | 412 |
வருவாய் கிராமங்கள் | 562 |
சட்டமன்றத் தொகுதிகள் | 4 |
மக்களவைத் தொகுதிகள் | 1 |
பரப்பளவு | 3530.58 ச.கி.மீ |
மக்கள் தொகை |
13,77,494 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
606xxx |
தொலைபேசிக் குறியீடு |
04151 |
வாகனப் பதிவு |
TN - 15 |
இணையதளம் | kallakurichi |
கள்ளக்குறிச்சி மாவட்டம் (Kallakurichi district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கள்ளக்குறிச்சி ஆகும்.[1] தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.[2][3][4][5]
கிரண் குர்ராலா என்பவர் இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆக நியமிக்கப்பட்டார்.[6]
மாவட்ட எல்லைகள்[தொகு]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் விழுப்புரம் மாவட்டம், வடக்கில் தர்மபுரி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், மேற்கில் சேலம் மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டம், தெற்கில் கடலூர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்[தொகு]
தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக துவக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான எல்லைகளை வரையறுக்கவும், உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு 19 சூலை 2019 அன்று ஒரு தனி அலுவலரை நியமித்துள்ளது.[7]
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 562 வருவாய் கிராமங்களும் கொண்டிருக்கும்.[8][9]
வருவாய் கோட்டங்கள்[தொகு]
வருவாய் வட்டங்கள்[தொகு]
- திருக்கோவிலூர் வட்டம்
- கள்ளக்குறிச்சி வட்டம்
- உளுந்தூர்பேட்டை வட்டம்
- சங்கராபுரம் வட்டம்
- சின்னசேலம் வட்டம்
- கல்வராயன்மலை வட்டம்
நகராட்சிகள்[தொகு]
பேரூராட்சிகள்[தொகு]
ஊராட்சி ஒன்றியங்கள்[தொகு]
- கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்
- சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்
- ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்
- சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்
- கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
- உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்
- திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்
- தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம்
- திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்
அரசியல்[தொகு]
புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியும் கொண்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி[தொகு]
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி (SC), சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு (ST), கங்கவள்ளி (SC), ஆத்தூர் (SC) ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்[தொகு]
கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மணிமுக்தா, கோமுகி அணைகளின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் பயனடைகின்றன. நெல், கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதனால் இப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகளும், மூன்று சர்க்கரை ஆலைகளும் உள்ளன.இந்த பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், மஞ்சள், பருத்தி, கம்பு, உளுந்து ஆகியவற்றை பயிரிடுகின்றனர்.
மக்கள்தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 16,82,687 ஆகும். அதில் ஆண்கள் 8,50,706 மற்றும் பெண்கள் 8,31,981 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 980 பெண்கள் வீதம் உள்ளனர். ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,96,050 ஆகவுள்ளனர். மாவட்ட மக்கள்தொகையில் சராசரி எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 10,20,833 ஆகும்.[10]
சுற்றுலாத் தலங்கள்[தொகு]
- கல்வராயன் மலைகள்
- திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதர் கோயில்
- திருக்கோவிலூர் கபிலர் குன்று
- திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில்
- கள்ளக்குறிச்சி சிவன் கோவில்
- ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம்
- சேந்தமங்கலம் கோட்டை
- திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோயில்
- பரிக்கல் நரசிம்மர் கோயில்
- உளுந்தண்டார் கோயில்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Tamil Nadu govt announces creation of Kallakurichi district". Times of india. 8 ஜனவரி 2019 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in:
|publisher=
(உதவி) - ↑ "கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்". 2019-11-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-11-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்
- ↑ தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது
- ↑ தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!
- ↑ செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்
- ↑ கள்ளக்குறிச்சி மாவட்டத் தனி அலுவலர் நியமனம்
- ↑ புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
- ↑ தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
- ↑ தமிழக மாவட்டங்கள் மற்றும் வருவாய் வட்ட வாரியான மக்கள்தொகை