வடக்கனந்தல்
| வடக்கனந்தல் | |
| ஆள்கூறு | 11°28′47″N 78°30′11″E / 11.47959°N 78.503059°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
| வட்டம் | சின்னசேலம் |
| ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
| முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
| மாவட்ட ஆட்சியர் | எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப |
| மக்கள் தொகை • அடர்த்தி |
23,034 (2011[update]) • 1,952/km2 (5,056/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 11.80 சதுர கிலோமீட்டர்கள் (4.56 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/vadakkanandal |
வடக்கனந்தல் (ஆங்கிலம்:Vadakkanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3]
இப்பேரூராட்சி பகுதியில் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் இயங்கி வருகிறது. மேலும் வடக்கனந்தல் பகுதியில் கோமுகி அணை மற்றும் கல்வராயன் மலைகள் உள்ளது.
அமைவிடம்
[தொகு]சின்னசேலம் வட்டத்தில் அமைந்த வடக்கனந்தல் பேரூராட்சி, விழுப்புரத்திலிருந்து 92 கி.மீ. தொலைவில் உள்ளது. சின்னசேலம் 18 கி.மீ. தொலைவில் உள்ளது. கள்ளக்குறிச்சி 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
[தொகு]11.80 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 112 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,397 வீடுகளும், 23,034 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 976 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,612 மற்றும் 611 ஆகவுள்ளனர்.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வடக்கனந்தல்
- ↑ வடக்கணேந்தல் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Vadakkanandal Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011