விழுப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விழுப்புரம்
—  தேர்வு நிலை நகராட்சி்  —
விழுப்புரம்
இருப்பிடம்: விழுப்புரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°56′31″N 79°29′56″E / 11.942°N 79.499°E / 11.942; 79.499ஆள்கூற்று: 11°56′31″N 79°29′56″E / 11.942°N 79.499°E / 11.942; 79.499
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம் . லட்சுமி இ. ஆ. ப. [3]
நகராட்சி் தலைவர் பாஸ்கரன்
மக்களவைத் தொகுதி விழுப்புரம்
மக்களவை உறுப்பினர்

எஸ். இராசேந்தரன்(அஇஅதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

96,253 (2011)

11,514/km2 (29,821/sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

8.36 square kilometres (3.23 sq mi)

44 metres (144 ft)


விழுப்புரம், தமிழ்நாட்டில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் முதல் பெரிய மாவட்டமாகும். இம்மாவட்டம் திருச்சிசென்னையை சாலையை இணைக்கும் தேசியநெடுஞ்சாலை எண் 45ன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது.இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம்(பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

காராணை விழுப்பரையன் மடல் என்ற நூலை செயங்கொண்டார் இயற்றினார். இந்நூலில் குறிப்பிடப்படும் காராணை என்னும் ஊர் விழுப்புரத்திற்கு அருகில் உள்ள சிற்றூர். காராணைக்காரனான ஆதிநாதன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் படைத்தளபதி. ஆதிநாதன் விழுப்பரையன் என்னும் குடிக்கு உரியவன். இவர்கள் விழுப்பாதரயன்,விழுப்பதரையர் என்ற பெயர்களிலும் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரில்தான் இன்றைய விழுப்புரம் நகரம் பெயர் பெற்றுள்ளது. [4]

விழுப்புரத்திற்கு விழிமா நகரம் என்ற இன்னொரு பெயரும் உண்டு.

சுற்றுலா[தொகு]

  • செஞ்சிக் கோட்டை,தியாகதுருகம் வரலாற்று சிறப்பு மிக்க மலை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வழிபாட்டுத் தலங்கள் ஆகும்.

திருவிழா[தொகு]

கூவாகம் திருவிழா வருடந்தோறும் நடைபெறுகிறது.அதில் அனைவரும் ஆர்வமுடன் பங்பெருவார்கல்.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16399.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுப்புரம்&oldid=2319097" இருந்து மீள்விக்கப்பட்டது