உள்ளடக்கத்துக்குச் செல்

அரகண்டநல்லூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரகண்டநல்லூர்
அரகண்டநல்லூர்
அமைவிடம்: அரகண்டநல்லூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°35′09″N 78°08′03″E / 11.5858°N 78.1341°E / 11.5858; 78.1341
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் திருக்கோவிலூர்
ஆளுநர் இராசேந்திர அர்லேகர்[1]
முதலமைச்சர் விஜய்[2]
மாவட்ட ஆட்சியர் எசு. சேக் அப்துல் இரகுமான், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

• அடர்த்தி

5,713 (2011)

• 1,231/km2 (3,188/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.64 சதுர கிலோமீட்டர்கள் (1.79 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/arakandanallur

அரகண்டநல்லூர் (ஆங்கிலம்:Arakandanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு அறகண்டநல்லூர் அதுல்யநாதேஸ்வரர் கோயில் உள்ளது.

அமைவிடம்

[தொகு]

அரகண்டநல்லூர் பேரூராட்சி திருக்கோவிலூர் அருகில் இருக்கிறது. கிழக்கே விழுப்புரம் 32 கி.மீ.; மேற்கே திருவண்ணாமலை 36 கி.மீ.; வடக்கே செஞ்சி 52 கி.மீ. மற்றும் தெற்கே கள்ளக்குறிச்சி 45 கி.மீ. தொலைவில் உள்ளன. திருக்கோயிலூர் தொடருந்து நிலையம் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் தான் அமைந்துள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

4.64 ச.கி.மீ. பரப்பும், 12 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 34 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,876 வீடுகளும், 5,713 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 85.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 986 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 884 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 695 மற்றும் 117 ஆகவுள்ளனர்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ↑ அரகண்டநல்லூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. ↑ Arakandanallur Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரகண்டநல்லூர்&oldid=4506686" இலிருந்து மீள்விக்கப்பட்டது