கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்திலுள்ள தனித்தொகுதியான இதன் சட்டமன்றத் தொகுதி எண் 73. இது விழுப்புரம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், பாண்டிச்சேரி மாநிலமும் கிழக்கே வங்கக்கடலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டம் மற்றும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 2.26 இலட்சம் ஆகும். வாக்களர்களில் வன்னியர் 30%, பட்டியல் இன மக்கள் 20%, உடையார் மற்றும் ரெட்டியார் 40, இசுலாமியர், மீனவர் மற்றும் பிறர் 10% ஆகவுள்ளனர். வானூர் (தனி) சட்டமன்றத்தின் பகுதிகள் பின்வருமாறு: [1]