மேல் சித்தாமூர் சமணர் கோயில்
மேல் சித்தாமூர் சமணர் கோயில் | |
---|---|
மேல் சித்தாமூர் சமணர் கோயில் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | செஞ்சி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூறுகள் | 12°16′11″N 79°30′51″E / 12.26972°N 79.51417°E |
சமயம் | சைனம் |
இணையத் தளம் | jinakanchi.com |
மேல் சித்தாமூர் சமணர் கோயில் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனம் வட்டத்தில், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில், திண்டிவனம் - செஞ்சி சாலையில், வல்லத்திற்கு அருகில் உள்ள மேல்சித்தாமூர் ஊராட்சியில் உள்ள மேல்சித்தாமூர் கிராமத்தில் உள்ளது.[1] இக்கோயில் தமிழ்ச் சமணர்களின் ஆன்மீகத் தலைமையிடமாக உள்ளது.[2][3]
அமைவிடம்
[தொகு]மேல் சித்தாமூர் சமணக் கோயிலும், மடமும் செஞ்சிக்கு கிழக்கில் 10 கிமீ தொலைவிலும்; திண்டிவனம் நகரத்திலிருந்து 20 கிமீ தொலைவிலும், வல்லம் அருகே 2 கிமீ தொலைவில் உள்ளது.
கோயில் வரலாறு
[தொகு]பொ.ஊ. 9 மற்றும் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு சமணக் கோயில்கள் மேல் சித்தாமூர் கிராமத்தில் உள்ளது. அதில் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்த மலைநாதர் கோயில், சமண தீர்த்தங்கரரான நேமிநாதருக்குக்கும், 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில், பார்சுவநாதருக்கும்[4] அர்பணிக்கப்பட்டுள்ளது.
மலைநாதர் கோயிலில் பொ.ஊ. 9ஆம் நூற்றாண்டில் செதுக்கிய தீர்த்தங்கரர்கள், பாகுபலி போன்ற அருகதர்கள், கணாதரர்கள், மற்றும் காவல் தேவதைகளான யட்சினிகள் பத்மாவதி, அம்பிகை மற்றும் யட்சன் தரணேந்திரன் ஆகியவர்களின் கற்சிற்பங்கள் உள்ளன.[5]
இக்கோயிலில் பொ.ஊ. 1578ஆம் ஆண்டில் அமைக்கபப்ட்ட 50 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட, 50 அடி உயரம் கொண்ட, மானஸ்தம்பம், கொடி மரம், பலி பீடம் கம்பம் உள்ளது. அருகில் உள்ள தேர் வடிவ மண்டபம், இரண்டு யானைகளால் இழுத்துச் செல்வது போன்று கட்டப்பட்டுள்ளது.
சமண மடம்
[தொகு]வீரசேனாச்சாரியாரால் துவக்கப்பட்ட சமணக் காஞ்சியில் இருந்த பழைமையான மடம், காலப்போக்கில் மேல் சித்தாமூரில் இடம்பெயரப்பட்டு, தமிழ்ச் சைனர்களின் ஆன்மீகத் தலைவரான இலக்குமிசேனா என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.[6] மேல் சித்தாமூர் கோயில் குறித்து அப்பாண்டைநாதர் உலா, தோத்திரத்திரட்டு, ஜைனசேத்திரமாலை போன்ற நூல்களில் பாடப்பட்டுள்ளது. இம்மடம் தமிழ்ச் சமணர்களின் தலைமையிடமாகும்.[7][8]
விழாக்கள்
[தொகு]ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பத்துநாட்கள் பெருவிழா நடைபெறும். ஏழாம்நாள் தேரோட்டம் நடைபெறும்.
படக்காட்சிகள்
[தொகு]-
இலக்குமிசேனர், தமிழ்ச் சமண மடத்தலைவர் மற்றும் ஆன்மீகத் தலைவர்
-
தமிழ்ச் சமணர்களின் தலைமை மடம்
-
கோயில் திருவிழாக்கள் நடைபெறும் இடம்
-
மூலவர் பார்சுவநாதர், தமிழ்ச் சமண மடம்
-
கோயில் நுழைவாயில்
-
மேல் சித்தாமூர் அருகில் உள்ள செஞ்சி சமணர் கோயில்
இதனையும் காண்க
[தொகு]- சமணக் காஞ்சி
- தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்
- மிர்பூர் சமணக் கோயில்
- தியோகர் சமணர் கோயில்கள்
- ராணக்பூர் சமணர் கோயில்கள்
- தில்வாரா சமணர் கோயில்
- தரங்கா சமணர் கோயில்கள்
- பாலிதானா கோயில்கள்
- கிர்நார் சமணர் கோயில்கள்
- சரவணபெலகுளா
- தமிழ்நாட்டில் சமணம்
- தமிழ்நாட்டில் சமணர் கோயில்கள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தமிழ் சமணத்தின் கிரீடம்
- ↑ "Tourist Information of Vilupuram District Tamilnadu South Indian States India". Southindianstates.com. Archived from the original on 2013-06-21. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ Facets of Jainology: Selected Research Papers on Jain Society, Religion, and ... - Vilas Adinath Sangave - Google Books. Books.google.com. 2001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171548392. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.
- ↑ "Viluppuram Places of Interest". Madura Welcome. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ "on www.jainsamaj.org ( Jainism, Ahimsa News, Religion, Non-Violence, Culture, Vegetarianism, Meditation, India. )". Jainsamaj.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ "on www.jainsamaj.org ( Jainism, Ahimsa News, Religion, Non-Violence, Culture, Vegetarianism, Meditation, India. )". Jainsamaj.org. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2012-05-27.
- ↑ "ஜீன காஞ்சி மடம்". Archived from the original on 2017-09-11. பார்க்கப்பட்ட நாள் 2017-10-16.