கள்ளக்குறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கள்ளக்குறிச்சி
—  முதல் நிலை நகராட்சி  —
கள்ளக்குறிச்சி
இருப்பிடம்: கள்ளக்குறிச்சி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°44′5″N 78°57′50″E / 11.73472°N 78.96389°E / 11.73472; 78.96389ஆள்கூற்று: 11°44′5″N 78°57′50″E / 11.73472°N 78.96389°E / 11.73472; 78.96389
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
வட்டம் கள்ளக்குறிச்சி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

Current MP (Successful candidate - P991) name is missing at d:Q6353510(Qualifier Political party (102) is missing under P585 in d:Q6353510)

சட்டமன்றத் தொகுதி கள்ளக்குறிச்சி
சட்டமன்ற உறுப்பினர்

பிரபு (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

52,507 (2011)

4,492/km2 (11,634/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.69 சதுர கிலோமீட்டர்கள் (4.51 sq mi)

கள்ளக்குறிச்சி (ஆங்கிலம்:Kallakkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சியும் ஆகும்.[3][4] கள்ளக்குறிச்சி, விழுப்புரத்திலிருந்து 77 கிமீ தொலைவில் உள்ளது.

முக்கிய சுற்றுலாதளங்கள்[தொகு]

கோமுகி அணை, மணிமுக்தா அணை,ஆஞ்சினேயர் கோவில்,கல்வராயன் மலை,மேகம் நீர்வீழ்ச்சி,பெரியார் நீர்வீழ்ச்சி,தியாகத்துருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள்.எஸ்.ஒகையூர் பெரிய ஏரி மற்றும் பழமைவாய்ந்த சிவன் கோவில், சித்தலுர் பெரியாய்க்கோவில்.

தொழிற்சாலைகள்[தொகு]

  • கோமுகி சக்கரைஆலை
  • மூங்கில்துறைபட்டு சக்கரைஆலை
  • தியாகத்துருகம் சக்கரைஆலை
  • கள்ளக்குறிச்சியை சுற்றி பரவலாக அரிசிஆலைகள்

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,801 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 52,507 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.17% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5541 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 902 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே மற்றும்ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.87% , இசுலாமியர்கள் 13.40%, கிறித்தவர்கள் 1.72% , தமிழ்ச் சமணர்கள் 0.17%, மற்றும் பிறர் 0.85% ஆகவுள்ளனர்.[5]

படத்தொகுப்பு[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கள்ளக்குறிச்சி&oldid=2791019" இருந்து மீள்விக்கப்பட்டது