சங்கராபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சங்கராபுரம்
—  பேரூராட்சி  —
சங்கராபுரம்
இருப்பிடம்: சங்கராபுரம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914ஆள்கூற்று: 11°53′22″N 78°54′50″E / 11.8895°N 78.914°E / 11.8895; 78.914
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
வட்டம் சங்கரபுரம் வட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

15,664 (2011)

1,350/km2 (3,496/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 11.60 சதுர கிலோமீட்டர்கள் (4.48 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/sankarapuram

சங்கராபுரம் (ஆங்கிலம்:Sankarapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கரபுரம் வட்டம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்[தொகு]

சங்கராபுரம் பேரூராட்சி விழுப்புரத்திலிருந்து 120 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம், 35 கிமீ தொலைவில் உள்ள சின்னசேலம் ஆகும். இதன் கிழக்கில் திருக்கோவிலூர் 35 கிமீ; மேற்கில் வடக்கணேந்தல் 20 கிமீ; வடக்கில் மூங்கில்துறைப்பட்டு 20 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு[தொகு]

11.60 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 41 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,539 வீடுகளும், 15,664 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.8%மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,004 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 935 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,304 மற்றும் 87 ஆகவுள்ளனர்.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. சங்கராபுரம் பேரூராட்சியின் இணையதளம்
  5. Sankarapuram Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கராபுரம்&oldid=2710828" இருந்து மீள்விக்கப்பட்டது