உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | 11°42′00″N 79°16′48″E / 11.700000°N 79.280000°Eஆள்கூறுகள்: 11°42′00″N 79°16′48″E / 11.700000°N 79.280000°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கள்ளக்குறிச்சி |
வட்டம் | உளுந்தூர்பேட்டை |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | கிரண் குர்ராலா, இ. ஆ. ப. |
சட்டமன்றத் தொகுதி | உளுந்தூர்பேட்டை |
சட்டமன்ற உறுப்பினர் |
ரா.குமரகுரு (அதிமுக) |
மக்கள் தொகை • அடர்த்தி |
23,734 (2011[update]) • 2,760/km2 (7,148/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 8.6 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/ulundurpet |
உளுந்தூர்பேட்டை (ஆங்கிலம்:Ulundurpettai), இந்திய மாநிலமான, தமிழ்நாட்டின், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
பெயர் காரணம்[தொகு]
இந்த ஊருக்கு உளுந்தூர்பேட்டை என்ற பெயர் வந்ததாற்கான காரணமாக சொல்லப்படும் கதை; முன்னொரு காலத்தில் ஒரு மிளகு வணிகன் மிளகு மூட்டையுடன் இங்கு வந்தான். இஃது என்ன முட்டை என்று ஒருவன் கேட்டான். உளுந்து மூட்டை என்று வேடிக்கையாக வணிகன் பொய் சொன்னான். ‘அஃது அப்படியே யாகுக’ என்று மற்றவன் கூறினான். அவ்வாறே மிளகு முட்டை உளுந்து மூட்டையாயிற்று. அப்படி ஆக்கியவர் சிவன்தான். இது சிவனது திருவிளையாடல் என உணர்ந்த வணிகன் இங்கே சிவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான். என்று ஒரு கதை சொல்லப்படுகிறது.[3]
அமைவிடம்[தொகு]
விழுப்புரத்திலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ள உளுந்த்தூர்பேட்டை பேரூராட்சிக்கு அருகில் அமைந்த உளுந்தூர்பேட்டை தொடர் வண்டி நிலையம், மதுரை - சென்னை இருப்புப் பாதையில், 2 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு[தொகு]
8.6 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 110 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள்தொகை பரம்பல்[தொகு]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,346 வீடுகளும், 23,734 மக்கள்தொகையும் கொண்டது. இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.09% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 990 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[5]
ஸ்ரீசாரதா ஆசிரமம்[தொகு]
உளுந்தூர்பேட்டையில், சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் அன்னை சாரதா தேவியின் பெயரில் அமைந்த சாரதா மடத்தின் கிளையான ஸ்ரீசாரதா ஆசிரமம் அமைந்துள்ளது.[6] கல்விப்பணியோடு, ஆதரவற்ற சிறுமிகளுக்கான இல்லம், முதியோர் இல்லம், மருத்துவப்பணி, பாரம்பரிய நெல் பாதுகாப்பு போன்ற பல சேவைகளிலும் இவ்வாசிரமத்தின் பங்களிப்புகள் உள்ளன.[7]
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ புலவர் சுந்தர சண்முகனார் (1993). "கெடிலக் கரை நாகரிகம்". நூல் 298. மெய்யப்பன் தமிழாய்வகம். பார்த்த நாள் 11 சூன் 2020.
- ↑ உளுந்தூர்பேட்டை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ [ https://www.census2011.co.in/data/town/803442-ulundurpettai.html Ulundurpettai Panchayat Population Census 2011]
- ↑ www.srisaradaashram.org
- ↑ கலைமகள்; டிசம்பர் 2014 ; பக்கம் 33-36