ஆலந்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலந்தூர்
புறநகர்ப் பகுதி
ஆலந்தூரில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு
ஆலந்தூரில் உள்ள கத்திப்பாரா சந்திப்பு
ஆலந்தூர் is located in சென்னை
ஆலந்தூர்
ஆலந்தூர்
ஆலந்தூர்(சென்னை)
ஆலந்தூர் is located in தமிழ் நாடு
ஆலந்தூர்
ஆலந்தூர்
ஆலந்தூர் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 12°59′51″N 80°12′02″E / 12.997500°N 80.200600°E / 12.997500; 80.200600ஆள்கூறுகள்: 12°59′51″N 80°12′02″E / 12.997500°N 80.200600°E / 12.997500; 80.200600
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
ஏற்றம்39 m (128 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்164,430
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-22
மக்களவைத் தொகுதிதிருப்பெரும்புதூர்
சட்டமன்றத் தொகுதிஆலந்தூர்

ஆலந்தூர் (Alandur), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது, வடக்கு மற்றும் கிழக்கில் கிண்டி, தெற்கில் ஆதம்பாக்கம், தென்மேற்கில் பழவந்தாங்கல் மற்றும் வடமேற்கில் பரங்கிமலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2011 நிலவரப்படி, ஆலந்தூர் மக்கள் தொகை 1,64,430 ஆகும். ஆலந்தூரின் நகர ஒருங்கிணைப்பு 2030 ஆம் ஆண்டளவில் 3,00,000 மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஆலந்தூரில் இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மற்றும் அண்டை பகுதிகளான புனித தோமையார் மலை கன்டோன்மென்ட் மற்றும் அருகிலுள்ள நகரங்களான கிண்டி மற்றும் ஆதம்பாக்கம் உள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான எம். ஜி. ராமச்சந்திரன், 1967 இல் ஆலந்தூரிலிருந்து தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சென்னையின் புகழ்பெற்ற அடையாளங்களான நேரு சிலை மற்றும் கத்திப்பாரா சந்திப்பு ஆகியவற்றையும் ஆலந்தூர் கொண்டுள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 13°02′N 80°13′E / 13.03°N 80.21°E / 13.03; 80.21 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அமைவிடம்[தொகு]

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலந்தூர் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதிகள்[தொகு]

ஆலந்தூர் சாலை பல நகரங்களுக்கு செல்லும் சாலை அமைப்புடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா சந்திப்பு, ஆலந்தூரில் உள்ளது; இதன் வழியாக சென்னையின் பிற நகருக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன.

அருகிலுள்ள தொடருந்து நிலையம் பரங்கிமலை தொடருந்து நிலையம் ஆகும்; புறநகர் இரயில்வே, தெற்கு இரயில்வே, மெட்ரோ இரயில், எம். ஆர். டி. எஸ். மற்றும் பொது பேருந்துகள் ஆகிய ஐந்து பொதுப் போக்குவரத்திற்கு இடமளிக்கும் திட்டங்கள் உள்ளன.

இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

மதவாரியான கணக்கீடு
மதம் சதவீதம்(%)
இந்துக்கள்
84.09%
முஸ்லிம்கள்
7.08%
கிறித்தவர்கள்
7.94%
சீக்கியர்கள்
0.06%
பௌத்தர்கள்
0.04%
சைனர்கள்
0.25%
மற்றவை
0.51%
சமயமில்லாதவர்கள்
0.03%
மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1981 97,449 —    
1991 1,25,244 +28.5%
2001 1,46,154 +16.7%
2011 1,64,430 +12.5%

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,64,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஆலந்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • செயின்ட் பீட்டர்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • பி. எஸ். பி. பி மில்லினியம் பள்ளி
  • மவுண்ட் கோட்டை உயர்நிலைப்பள்ளி
  • மகேஷ் நிறுவனம்
  • கிருபா தொடக்கப்பள்ளி
  • இந்து காலனி செல்லம்மாள் வித்யாலயா
  • வியாச வித்யாலயா பள்ளி
  • AIM நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி
  • பிரின்ஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • இம்மானுவேல் தொடக்கப்பள்ளி
  • நேசனல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
  • ஏ. ஜெ. எஸ். மேல்நிலைப்பள்ளி
  • இந்திரா காந்தி மெட்ரிகுலேசன் பள்ளி

வழிபாட்டுத் தலங்கள்[தொகு]

கோயில்கள்[தொகு]

  • துளுகானத்தம்மன் கோயில்
  • படை வீடு அம்மன்
  • சிறீ வீர அஞ்சநேயர் கோயில்
  • தர்மராஜா கோயில்
  • சிறீ சுப்பிரமண்ய சுவாமி கோயில்
  • பழவந்தாங்கல் வேம்புலி அம்மன் கோயில்
  • ஆலாச்சி அம்மன் கோயில்
  • ஈஸ்வரன் கோயில்:"சிறீ திருபுரசுந்தரி சமேதா, சிறீ வேதபுரிஸ்வரர் கோயில்
  • விஷ்ணு கோயில்:"சிறீ பிரசன்னா வெங்கடேச பெருமாள் கோயில்"
  • அங்காள அம்மன் கோயில்
  • சிறீ பாலா விநாயகர் கோயில்
  • கற்பக விநாயகர் கோயில்
  • கடும்பாடி அம்மன் கோயில்
  • பொன்னி அம்மன் கோயில்
  • வசுபூஜ்ய ஜெயின் ஸ்வேதாம்பர் கோயில்
  • பக்தவாச்சல அஞ்சநேயர் கோயில்
  • தர்மலிங்கேசுவரர் கோயில்
  • லட்சுமி நரசிம்மர் கோயில்
  • ஸ்ரீ ஹயாவதான கோயில்
  • அர்த்தநரீசுவரர் கோயில்
  • சித்தி விநாயகர் கோயில்
  • இந்து காலனி விநாயகர் கோயில்
  • ஸ்ரீ விஸ்வரூப அஞ்சநேயர் கோயில்
  • ஸ்ரீ உத்தரா குருவாயுரப்பன் கோயில்

தேவாலயங்கள்[தொகு]

  • கிரேஸ் ஏ. ஜி தேவாலயம், நேரு காலனி, பழவந்தாங்கல்
  • செயின்ட் பாட்ரிக் கத்தோலிக்க தேவாலயம்
  • செயின்ட் தாமஸ் தேவாலயம், பரங்கிமலை
  • செயின்ட் அந்தோணி கத்தோலிக்க தேவாலயம், ஆலந்தூர்
  • செயின்ட் மார்க்ஸ் கத்தோலிக்க தேவாலயம், ஆதம்பாக்கம்
  • செயின்ட் ஜூட்ஸ் கத்தோலிக்க தேவாலயம், வனவம்பேட்டை
  • குழந்தை இயேசு கத்தோலிக்க தேவாலயம், கிண்டி
  • கிறிஸ்து தேவாலயம்
  • கேரிசன் சர்ச்
  • செயின்ட் தாமஸ் ஆங்கிலிகன் தேவாலயம், மூவரசம்பேட்டை
  • லிவிங் காட் தேவாலயம், ஆலந்தூர்

மசூதிகள்[தொகு]

  • காதிம் வலாஜா மசூதி - நங்கநல்லூர்
  • மஸ்ஜித்-இ-அக்பரி (பி. வி. நகர், பழவந்தாங்கல்)
  • மஸ்ஜித்-அ-அஹ்லே-ஹதீஸ்
  • மஸ்ஜித்-அ-ரஹ்மானியா (அஹ்லே ஹதீஸ், சிமென்ட் சாலை)
  • மஸ்ஜித்-அ-அஸீம்ஜாஹி-கோலாண்டாஸி
  • மஸ்ஜித்-அ-பூர்னி லப்பை
  • கட்ஜா மசூதி
  • மஸ்ஜித் தக்வா
  • மஸ்ஜித் தயிப்
  • மஸ்ஜித் டி.என்.டி.ஜே, ஆலந்தூர்
  • மஸ்ஜித் இக்லாஸ்

மளிகை சந்தை[தொகு]

எம். ஜி. ஆர். சந்தை அல்லது ஆலந்தூர் மளிகை சந்தை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இது எம். கே. என். சாலையின் நடுவில் அமைந்துள்ளது (எம். கே. என். சாலை கிண்டியில் இருந்து தொடங்கி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முடிகிறது).

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Alandur". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 19, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  4. "இந்திய 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பு". 2012-04-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-12-21 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலந்தூர்&oldid=3594452" இருந்து மீள்விக்கப்பட்டது