மாங்காடு (காஞ்சிபுரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்காடு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் குன்றத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

38,188 (2011)

4,546/km2 (11,774/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.40 சதுர கிலோமீட்டர்கள் (3.24 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/mangadu

மாங்காடு (Mangadu) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியாகும். சென்னை பெருநகர பகுதியின் ஓர் அங்கம் ஆகும்.இங்கு புகழ்பெற்ற மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் உள்ளது. இதனருகில் பூந்தமல்லி நகராட்சி உள்ளது.

நகராட்சியாக தரம் உயர்த்தல்[தொகு]

12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3]

அமைவிடம்[தொகு]

மாங்காடு நகராட்சி பல்லவரத்தில்லிருந்து 11 கிமீ; சென்னை சென்டரல் இரயில் நிலையத்தில்யிலிருந்து 19 கிமீ, சென்னை விமான நிலையத்திலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 11 கிமீ தொலைவில் உள்ள ஆவடி ஆகும்.

நகராட்சியின் அமைப்பு[தொகு]

8.40 சதுர கிலோமீட்டர் பரப்பும், 27 நகர மன்ற உறுப்பினர்களையும், 482 தெருக்களையும் கொண்ட இந்நகராட்சி திருப்பெரும்புதூர் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[4] தற்போது இந்த நகராட்சியுடன் அய்யப்பந்தாங்கள், கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பரணிபுத்தூர், மௌலிவாக்கம், மலையாம்பபாக்கம் ஆகிய ஊராட்சிகள் இணைய உள்ளன.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்நகராட்சி 9,438 வீடுகளும், 38,188 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இந்நகராட்சியின் எழுத்தறிவு 86.91% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1004 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

மேற்கோள்கள்[தொகு]