காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காமாட்சியம்மன் கோயில், காஞ்சிபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் காமாக்ஷி (காமாட்சி) அம்மன் கோவில்.

காமாட்சி அம்மன் கோயில் காஞ்சிபுரத்தில் அமைத்துள்ள புகழ்பெற்ற சக்தி தலமாகும். "காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி" என்ற சொல்லாடல், இம்முப்பெரும் சக்தி வடிவங்களைக் குறிப்பிட்டுச் சொல்லும். அதிலும் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார். தந்திர சூடாமணியின்படி இது 51 சக்தி பீடங்களில் தேவியின் முதுகு எலும்பு விழுந்த சக்தி பீடமாகும். இக்கோவில் மகா சக்தி பீடங்களிலும் ஒன்றாகத் திகழ்கிறது.[1]

கோயில் வரலாறு[தொகு]

காஞ்சி காமாச்சி அம்மன் கோவிலின் பொற்கோபுரங்கள்.
காமாட்சி அம்மன் கோயில் - 1811 ஆம் ஆண்டைய ஓவியம்

காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களையும் மையமாகக் கொண்ட ஒரே சக்தி ஆலயம் காமாட்சி அம்மன் கோயில் ஆகும், இது போல வேறிடங்களில் அம்மனுக்கு தனி ஆலயங்கள் இல்லை. காமாட்சி இங்கு "பரப்ரஹ்ம ஸ்வரூபினி" என்று வணங்கப்படுகிறார். ஆரம்பத்தில் மிகவும் உக்கிரமாக இருந்ததால், 'உக்ர ஸ்வரூபினி' என அழைக்கப்பட்டார். ஆதி சங்கரரால், எட்டாம் நூற்றாண்டில், இக்கோயிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மிகவும் உக்கிரமாக இருந்த காளியன்னையை, சௌம்யமான காமாட்சியாக ஆதிசங்கரர் சாந்தப்படுத்தினார்.

அயோத்தியின் தசரத சக்ரவர்த்தி இத்திருக்கோயிலில் ’புத்திர காமேஷ்டி’ யாகம் செய்தார். இது மார்கண்டேய புராணத்தில் உள்ள தகவல் ஆகும்.[2] காமாட்சியின் பிரகாசமான முகத்தை தீர்கமாக தரிசிப்பவர்களுக்கு, அம்மனின் கண்கள் சிமிட்டுவது போன்றதான உணர்வினை ஏற்படுத்துமாம்.[மேற்கோள் தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. இத்திருக்கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3] இக் கோயிலின் கருவறையில் காமாக்ஷியின் உருவம் அமர்ந்திருக்கும் கோலத்தில் உள்ளது. சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினைக் கண்டு களிக்கலாம். மேலும் காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோயிலில் தலவிருட்சம் (மாமரம்) ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது.[4]

திருக்கல்வனூர்[தொகு]

திருக்கல்வனூர் திவ்ய தேசம் காமாட்சி அம்மனின் கருவறைக்கு அருகில், 7 -10 ஆம் நூற்றாண்டின் ஆழ்வாரால் (தமிழ் துறவி கவிஞர்கள்) மகிமைப்படுத்தப்பட்ட விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இருந்தது. இக் கோயில் சிதிலமடைந்ததால் அங்குள்ள தெய்வம் இப்போது காமாட்சி அம்மன் கோவிலுக்குள் வைக்கப்பட்டுள்ளது. கோயில் விமானத்தின் மேல் சிற்பங்கள் உள்ளன.[5]

தமிழ்நாட்டின் பிற புகழ்பெற்ற காமாட்சி கோவில்கள்[தொகு]

    ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு, சென்னை

ஸ்ரீ ஆதி காமாட்சி அம்மன் கோவில், நல்லுக்குறிச்சிசீமை,முதுகுளத்தூர் வட்டம்:623601, இராமநாதபுரம்,தமிழ்நாடு(பரமக்குடி தொடங்கி அபிராமம் செல்லும் வழி,பரமக்குடியிலிருந்து சுமார் 16 கி.மீ தொலைவில் இத்திருத்தலம் இடதுபுறம் சாலையை அருகில் அமைந்துள்ளது,இக்கோவிலில் மாசிக்களரி பூஜை மிகவும் பிரசித்திபெற்ற திருவிழா,சிவராத்திரி பூஜையும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது),

    ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில், திருவரங்கம், பரமக்குடிக்கு அருகில் (பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது), ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு.
    ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்,ஊர்:-அரப்போது, பரமக்குடிக்கு சற்று தொலைவில் (சுமார் 20கி.மீ) அரப்போது ஊர் உள்ளது. திருவரங்கம் காமாட்சியம்மன் கோவில் தாண்டியே அரப்போது காமாட்சி கோவிலுக்கு செல்ல வேண்டும் இரண்டு கோவிலுக்கும் ஒரே வழித்தடம் ஆகும், ராமநாதபுரம் மாவட்டம்,தமிழ்நாடு.
    ஸ்ரீ ஏகாம்பரேஸ்வர் காமாட்சி அம்மன் கோவில், கீலா எரல் (எட்டையபுரம் அருகே, கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்), தமிழ்நாடு, இந்தியா.

ஸ்ரீ சக்ரம் இங்கே ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு 51 கடவுள்களை வணங்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. காமாட்சி அம்மனிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவதற்காக உலகெங்கிலும் உள்ள மக்களை ஈர்க்கும் விதமாக, தொடர்ச்சியான 7 நாட்களில் (தமிழ் மாதமான மாசியில்) ஒவ்வொரு ஆண்டும் திருவிழா செய்யப்படுகிறது. . மேலும், இந்த பண்டிகை நாட்களிலும், ஒவ்வொரு தமிழ் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையும் கோயில் வளாகத்திற்குள் அன்னதானம் (இலவச உணவு) வழங்கப்படுகிறது.

உற்சவ விழாக்கள்[தொகு]

ஆண்டு தோறும் மாசி மாதத்தில் உற்சவ விழாக்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும். இவற்றில் தேர்த்திருவிழாவும், தெப்பக்குள உற்சவமும் மிகச் சிறப்புடையது. நவராத்திரி, ஆடி மற்றும் ஐப்பசி பூசம், சங்கர ஜெயந்தி மற்றும் வைகாசி மாதத்தில் நடைபெறும் வசந்த உற்சவம் ஆகியவை மிகவும் புகழ் பெற்றவை. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]