மகா சக்தி பீடங்கள்
மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்து சமயத்தில் சாக்த மதப் பிரிவினர் இக்கோவில்களுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாக்த பிரிவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பலரும் வழிபடும் கோவில்களாக இந்தப் பதினெட்டு தலங்களும் விளங்குகின்றன.
அட்ட தச சக்தி பீட தோத்திரம்
[தொகு]இது ஆதி சங்கரரால் இயற்றப்பட்ட தோத்திரம் என்று கூறப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் எந்தெந்த சக்தி பீடங்கள் மிக முக்கியமானவை என்று உணர்த்த அவர் இந்தத் தோத்திரத்தை அருளியதாகக் கூறப்படுகிறது.
மகா சக்தி பீடங்கள்
[தொகு]மகா சக்தி பீடக் கோவில்களின் அமைவிடங்கள்:[1] [2]
1. சங்கரி தேவி - இடுப்பு
இலங்கை (போர்ச்சுக்கீசிய படையெடுப்பின் போது இக்கோவில் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலின் சங்கரி தேவி சிலை தற்போது திருக்கோணமலை சிவன் கோவிலருகில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நயினாதீவில் உள்ள நாகபூஷணி அம்மன் என்ற மற்றொரு தேவியும் சக்தி பீடமென்கிறார்கள். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
2. காமாட்சி - முதுகுப் பகுதி
தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், தற்போதுள்ள புகழ்பெற்ற காமாட்சியம்மன் கோவில் அருகில் ஆதி காமாட்சி அல்லது காளிகாம்பாள் அல்லது ஆதி பீட பரமேசுவரி என்ற பெயரில் இதற்கான கோவில் உள்ளது. இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
3. ஸ்ருங்கலா தேவி - வயிற்றுப் பகுதி
மேற்கு வங்கம் அல்லது குஜராத்தின் ப்ரத்யும்னம் (தற்போது இக்கோவில் இல்லை. மேற்கு வங்கத்தின் ப்ரத்யும்னம் என்ற பகுதியில் உள்ள பழைய கோவில் இடிபாடு இக்கோவிலாக இருக்கலாம்). இதற்குப் பதிலாக மேற்கு வங்கத்தின் பன்ஸ்பேரியாவிலுள்ள ஹன்ஸேஸ்வரி காளி கோவிலும் கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது. இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
4. சாமுண்டீஸ்வரி தேவி - முடி
கர்நாடக மாநிலம் மைசூரின் சாமுண்டீசுவரி மலைகள். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
5. ஜோகுலாம்பா தேவி - மேல் பற்கள்
ஆந்திராவின் ஆலம்பூர். இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
6. ப்ரம்மராம்பிகா தேவி - கழுத்துப் பகுதி
ஆந்திராவின் ஸ்ரீசைலம்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
7. மஹாலக்ஷ்மி தேவி - முக்கண்கள்
மஹாராஷ்ட்ராவின் கோலாப்பூர்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
8. எகவீரிகா தேவி - வலது கை அல்லது வலது தோள்ப்பட்டை
எகவீரிகா தேவி கோவில் மகாராஷ்டிரா மாநிலம் யாவத்மால் மாவட்டத்தில் மாஹூரில் உள்ளது. தேவி எகவீரிகா மாதா என்று அழைக்கப்படுகிறாள். இது கின்வாட்டில் (Kinwat) இருந்து 50 கி.மீ தொலைவிலும் நன்தேத்தில் அல்லது நாண்டேட்டில் (Nanded) 126 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நாக்பூர் மாஹூரில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் மாஹூர் ரேணுகா கோவிலும் சக்தி பீடமாக வணங்கப்படுகிறது.
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
9. மஹாகாளி தேவி - மேல் உதடு
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனி. இங்குள்ள கர்ஹ் காளி அல்லது கத் காளி கோவில் சக்தி பீடமாகும். மேலும் இதே உஜ்ஜைனியிலுள்ள ஹரஸித்தி மாதா கோவிலும் சக்தி பீடமென்கிறார்கள்.
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
10. புருஹூதிகா தேவி - இடது கை
ஆந்திராவின் பித்தாப்புரம்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
11. கிரிஜா தேவி - தொப்புள்
ஒரிசாவின் கட்டாக்கில் உள்ளது. புவனேஸ்வரில் இறங்கி, விரஜா எனப்படும் ஜாஜ்பூர் நோக்கி NH5ல் பயணிக்க வேண்டும். இது புவனேஸ்வரிலிருந்து 112 கி.மீ தொலைவிலுள்ளது.
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
12. மாணிக்யம்பா தேவி - இடது கன்னம்
ஆந்திராவின் த்ரக்ஷராமம்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
13. காமரூபா தேவி / காமாக்யா தேவி - யோனி
அஸ்ஸாமின் கௌகாத்தியிலுள்ள காமாக்யா கோவில்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
14. மாதவீஸ்வரி தேவி - கை விரல்கள்
உத்திரப் பிரதேசத்தின் அலகாபாத் அருகிலுள்ள ப்ரயாகையின் (திரிவேணி சங்கமத்திற்கு மிக அருகில்) அலோப்பி தேவி கோவில் அல்லது அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள மீராப்பூரின் லலிதா கோவில்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
15. வைஷ்ணவி தேவி / ஜ்வாலாமுகீ தேவி - தலைப் பகுதி
ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ராவிலுள்ள ஜ்வாலாமுகி கோவில்
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
16. சர்வ மங்களா தேவி / மங்கள கௌரி - மார்பகங்கள்
பீகாரின் கயாவிலுள்ள மங்களகிரி மலை
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
17. விசாலாட்சி - மணிக்கட்டுகள்
உத்திரப் பிரதேசத்தின் வாரணாசி
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
18. சரஸ்வதி தேவி / சாரதா தேவி காஷ்மீர் – சாரதா பீடம் - வலது கை
தற்போது இக்கோவிலின் இடிபாடுகள் மட்டுமே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ளது. பழமையான சாரதா மந்திர், அதாவது ஆதி சங்கரர் தரிசித்த தலம் இப்பொழுது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. இந்த கோயில் கிஷன்கங்கா நதியின் இருகரைகளிலும் அமைந்துள்ளது. இந்தியாவைப் பிரித்தவுடன் மக்கள் அனைவரையும் அங்கிருந்து ஜம்முவிலிருக்கும் பன்டாலாப் என்ற இடத்திற்கு இடமாற்றம் செய்தனர். அனைவரும் பாகிஸ்தானிலிருக்கும் கோயிலை போன்று ஒரு கோயில் எழுப்பினர். சாரதா தேவியாக இங்கு வீற்றிருப்பது அன்னை சரஸ்வதி. அந்த நேரத்திலிருந்து, காஷ்மீரை சாரதாபீடம் என்று அழைக்கப்பட்டது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் சார்பாகக் கட்டப்பட்ட ஸ்ரீ சரஸ்வதி மந்திர் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பாரமுல்லா என்ற இடத்தில், (192114 - பின்கோடு) ஸ்ரீ நகரில் இருந்து ஜம்முவை இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. தேவி கோவில், பொதுவான தென் இந்திய கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் தற்போது அப்பகுதி மக்கள் சாரதா பீடமாக வணங்கி வருகிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே சிவன் கோவில் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
அல்லது இந்தப் பீடத்திற்கான மாற்றுத் தலங்களான கர்நாடகாவின் சிருங்கேரி சாரதா கோவிலையும், ஆந்திராவின் பஸாரா சரஸ்வதி கோவிலையும், மத்தியப் பிரதேசத்தின் மைஹர் சாரதா கோவிலையும் தரிசிக்கலாம்.
இந்த பீடத்திற்கான கோவில்களாகக் கருதப்படும் இடங்கள்:
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- 18shaktipeetasofdevi.blogspot.in
- www.shaktipeethas.org பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம்
- www.shaktipith.com பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்
- யோகிகள் கூடும் சக்தி பீடம் காமாக்யா கோவில் - நக்கீரன்[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்களும் குறிப்புகளும்
[தொகு]- ↑ http://18shaktipeetasofdevi.blogspot.in/2011/04/18-shakti-peethas.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-02-14. பார்க்கப்பட்ட நாள் 2015-05-13.