தந்திர சூடாமணி
Jump to navigation
Jump to search
தந்திர சூடாமணி (Tantra Chudamani) என்பது சமக்கிருதத்தில் எழுதப்பட்ட தந்திரங்கள் (மந்திர தந்திரங்கள்) அடங்கிய ஒரு நூலாகும். தந்திர நூல்கள் பல இருப்பினும் அவற்றிற்கெல்லாம் சூடாமணி போல் விளங்குவதால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இந்த நூலில் உள்ள ’’பீட நிர்ணய தந்திர தோத்திரத்தின்’’ படியே அம்மனின் 51 சக்தி பீடங்கள் கண்டறியப்படுகின்றன. சக்தி பீடங்கள் பற்றிய குறிப்புகள் பல நூல்களில் இருந்தாலும் அவற்றிலெல்லாம் தெளிவான குறிப்புகள் இல்லை. இந்நூலில் சக்தி பீடத்தின் பெயர், அங்குள்ள தேவியின் பெயர், அங்குள்ள பைரவரின் பெயர் மற்றும் தேவியின் உடல் பகுதி ஆகியவை தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.[1]
இந்த பீட நிர்ணய தந்திர தோத்திரத்தில் சிவபெருமான் தேவியிடம் சக்தி பீடங்கள் பற்றிக் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.