உள்ளடக்கத்துக்குச் செல்

காமாக்யா கோவில்

ஆள்கூறுகள்: 26°09′59″N 91°42′20″E / 26.166426°N 91.705509°E / 26.166426; 91.705509
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமாக்கியா கோவில்
Kamakhya Temple
காமாக்கியா கோவில்
ஆள்கூறுகள்:26°09′59″N 91°42′20″E / 26.166426°N 91.705509°E / 26.166426; 91.705509
பெயர்
பெயர்:காமாக்யா கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:அசாம்
மாவட்டம்:காம்ரூப்
அமைவு:நீலாச்சல் குன்று, குவகாத்தி
கோயில் தகவல்கள்
மூலவர்:காமாக்யா
சிறப்பு திருவிழாக்கள்:அம்புபாச்சி மேளா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நீலாச்சல் வகை
கோயில்களின் எண்ணிக்கை:6
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை:6
வரலாறு
கட்டப்பட்ட நாள்:8ம்-7ம் நூற்றாண்டு[1]
அமைத்தவர்:பலர்

காமாக்கியா கோவில் (Kamakhya Temple, அசாமிய மொழி: কামাখ্যা মন্দিৰ) காமாக்கியா என்ற இந்துக் கடவுளின் கோவில் ஆகும். இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும்.[2] இந்தியாவில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரின் மேற்குப் பகுதியில் நீலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இங்குள்ள பத்து தச மகா வித்யா தேவிகளின் கோவில்கள் அடங்கிய தொகுதியில் காமாக்கியா பிரதான கோவிலாகும்.[3] இவற்றில் திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலா தேவியரின் கோவில்கள் காமாக்கியா கோவிலினுள் அமைந்துள்ளன. ஏனைய ஏழும் தனித்தனிக் கோவில்களாக அமைக்கப்பட்டுள்ளன.[4]

அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் நீலாச்சல் என்ற மலை அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 700 அடி உயரத்தில் இந்த மலை மீது காமாக்யாதேவியின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. இது தாட்சாயிணியின் (சதி தேவி) யோனி விழுந்த சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது. [5] [1] பரணிடப்பட்டது 2020-04-26 at the வந்தவழி இயந்திரம்

காமாக்யா கோவில்

கோவிலைப் பற்றிய புராணத் தகவல்கள்

[தொகு]

காமாக்யா தேவிக்கு திரிபுர பைரவி, அமிர்தா, காமா, காமதா, மங்கள கௌரி, காமரூபிணி, யோனிமண்டல வாஸினி, மஹாகாளி, மஹாமாயா, காமரூபா தேவி, காமேஸ்வரி, நீல பார்வதி என்று பல பெயர்கள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தலத்தை காமரூபம், ஹரிக்ஷேத்திரம், பிரக்ஜோதிஷபுரம், காமகிரி, காமயோனி மண்டலம், மஹாமாயா ஸ்தானம், நீலாச்சலம், நீல் பர்வதம் என்று புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த கோவிலில் சிலை இல்லை. இங்கே ஒரு யோனி வடிவத்தில் உருவான ஒரு தட்டையான பாறை மட்டுமே வணங்கப்படுகிறது, அதனால்தான் காமக்கியா தேவியும் இரத்தப்போக்கு தேவி என்று போற்றப்படுகிறார். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள் , குழந்தை பாக்கியம் கிடைக்கும் , நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூபு அடைவாரகள்....[6]

இங்கு பாண்டவர்கள் தேவியை வழிபட்டதாக மஹாபாரதத்தின் விராட பர்வம் மற்றும் பீஷ்ம பர்வம் கூறுகிறது. மகாபாரதத்தின் விராட பர்வம் (6) மற்றும் பீஷ்ம பர்வம் (23) ஆகியவற்றில் காமாக்யாவை அர்ஜுனனும் யுதிஷ்ட்ரரும் பிரார்த்தித்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் தந்திர சூடாமணி போன்ற பல தந்திர நூல்களும் இக்கோவிலை சக்தி பீடங்களில் மிக உயர்ந்த பீடமாகச் சொல்கின்றன. மேலும் காளிகா புராணம் கூறும் மிக முக்கியமான நான்கு ஆதி சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

இக்கோவில் பற்றிய தகவல்கள் வேத வியாசரின் தேவி பாகவத புராணத்திலும் உள்ளது.

அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்ரம் தேவிக்கு 18 மகா சக்தி பீடங்கள் உள்ளதாகக் கூறுகிறது. அதிலும் காமாக்யா கோவில் இடம் பெறுகிறது.

காமாக்யா கோவிலில் மந்திர தந்திரங்கள்

[தொகு]

இந்து சமயத்தின் ஆறு பிரிவுகளில், சக்தி வழிபாட்டு முறையில்தான் அதிக அளவில் மந்திர தந்திரங்கள் கையாளப் படுகின்றன. அவ்வகை வழிபாட்டுக் கென்று சிறப்பான ஆலயங்களும் உள்ளன. அவற்றில் தலையாயது காமாக்யா தேவி கோவில்.

காமாக்யா கோவில் கட்டிட அமைப்பு

[தொகு]

பத்தாம் நூற்றாண்டில் அஸ்ஸாம் மன்னர்களால் சீர்திருத்தப்பட்ட உண்மையான காமாக்யா கோவில் பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. தற்போதுள்ள கோயிலை கூச் பீகாரின் அரசர் நர நாராயணா என்பவர் கி.பி.1565 ல் மீண்டும் கட்டினார். 1665ல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.[7] இக்கோவிலின் வெளித்தோற்றத்தைப் பார்த்தால் மட்டுமே கோவில் போல தோன்றும். உள்ளே சென்றால் இருண்ட பாதாள குகை போன்று இருக்கும். இங்கு சிறு விளக்கு வெளிச்சத்தில் காமாக்யாவின் யோனி பீடத்தை தரிசிக்கலாம். அங்கிருந்து வரும் நீரூற்றின் நீரை பக்தர்கள் தீர்த்தமாகப் போற்றுகின்றனர்.

தச மஹா வித்யாக்களின் சன்னதிகள்

[தொகு]

இக்கோவிலில் காளி, தாரா, லலிதா திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி, பைரவி, சின்னமஸ்தா, தூமாவதி, பகளாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய தச மஹா வித்யாக்கள் எனப்படும் பத்து தேவியருக்கும் சன்னதிகள் உண்டு.

காமாக்யா கோவில் திருவிழாக்கள்

[தொகு]
  1. அம்புபச்சி மேளா - அம்புபாச்சி என்ற சொல் அம்பு மற்றும் பச்சி ஆகிய இரண்டு சொற்களால் ஆனது, அங்கு அம்பு என்பது தண்ணீர் என்றும், பச்சி என்றால் மலச்சிக்கல் என்றும் பொருள். அம்புபாச்சி மேளா நாடு முழுவதும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும், மேலும் காமக்கியா கோயிலின் புனித பண்டிகைகளில் ஒன்றாகும்.[8]
  2. துர்க்கா பூஜா
  3. மானஷா பூஜா [9]

உமாநந்தர் கோவில்

[தொகு]

இக்கோவில் காமாக்யா பீடத்திற்கான பைரவரின் கோவிலாகும்.[10]

பிரம்மபுத்ரா ஆற்றில் அமைந்திருக்கும் பீகாக் ஐலேண்ட் தீவுப்பகுதியில் உமானந்தா கோயில் வீற்றிருக்கிறது. ஆஹோம் வம்ச மன்னரான கடாதர் சின்ஹா’வின் ஆட்சிக்காலத்தில் பர் புகான் கர்கன்யா ஹந்திக் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

ஃபெர்ரி படகுகள் மற்றும் மோட்டா படகுகள் மூலமாக மட்டுமே இந்த கோயிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. காளிகாட் காளி கோயில்
  2. ஆதி சக்தி பீடங்கள்
  3. சக்தி பீடங்கள்
  4. விமலா தேவி சக்தி பீடக் கோவில்
  5. தாராதாரிணி சக்தி பீடக் கோவில்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "it is certain that in the pit at the back of the main shrine of the temple of Kamakhya we can see the remains of at least three different periods of construction, ranging in dates from the eighth to the seventeeth century A.D." (Banerji 1925, p. 101)
  2. (Urban 2008, p. 500)
  3. "About Kamakhya Temple". Archived from the original on 2014-05-24. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
  4. (Shin 2010, p. 4)
  5. http://tamil.nativeplanet.com/guwahati/attractions/kamakhaya-temple/
  6. "Kamakhya Temple". Kamakha Temple - Kamakhya Temple Guwahati. Archived from the original on 2020-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
  7. http://temple.dinamalar.com/news_detail.php?id=107
  8. "Ambubachi Mela". Kamakha Temple - Kamakhya Temple Guwahati. Archived from the original on 2020-04-12. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-18. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
  10. http://tamil.nativeplanet.com/guwahati/attractions/umananda-temple/

உசாத்துணை

[தொகு]
  • Banerji, R D (1925), "Kamakhya", Annual Report 1924-25, Archeological Survey of India, pp. 100–101, பார்க்கப்பட்ட நாள் March 2, 2013 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Choudhury, Nishipad Dev (1997), "Ahom Patronage on the Development of Art and Architecture in Lower Assam"", Journal of the Assam Research Society, 33 (2): 59–67 {{citation}}: Invalid |ref=harv (help)
  • Das Gupta, Rajatananda (1960), An Architectural Survey of the Kamakhya Temple, Guwahati: Nilima Das Gupta {{citation}}: Invalid |ref=harv (help)
  • Kakati, Banikanta (1989) The Mother Goddess Kamakhya, Publication Board, Guwahati
  • Gait, Edward (1905) A History of Assam
  • Goswami, Kali Prasad (1998). Kamakhya Temple. Guwahati: Kāmākhyā Mandira. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Neog, Maheshwar (1980). Early History of the Vaishnava Faith and Movement in Assam. Delhi: Motilal Banarasidass. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Sarkar, J. N. (1992) Chapter I: The Sources in The Comprehensive History of Assam, (ed H K Barpujari) Publication Board, Assam.
  • Sarma, P (1983). "A Study of Temple Architecture under Ahoms". Journal of Assam Research Society. 
  • Sarma, P C (1988). Architecture of Assam. Delhi: Agam Kala Prakashan. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Shin, Jae-Eun (2010). "Yoni, Yoginis and Mahavidyas : Feminine Divinities from Early Medieval Kamarupa to Medieval Koch Behar". Studies in History 26 (1): 1–29. doi:10.1177/025764301002600101. 
  • Urban, Hugh B. (2008). "Matrix of Power: Tantra, Kingship, and Sacrifice in the Worship of Mother Goddess Kāmākhyā". The Journal of South Asian Studies (Routledge) 31 (3): 500–534. doi:10.1080/00856400802441946. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமாக்யா_கோவில்&oldid=3783593" இலிருந்து மீள்விக்கப்பட்டது