மாதங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாதங்கி என்பவர் சைவ சமயக்கடவுளான சிவபெருமானின் மனைவியாவார். இவர் பிரம்மாவின் குமாரனாகிய மதங்கர் என்பவரின் மகள்.

பெயர்க்காரணம்[தொகு]

அம்பிகை, மதங்கரின் மகளாக பிறந்தமையால் மாதங்கி என அழைக்கப்படுகிறார். இவருக்கு ராஜ மாதங்கி, ராஜ சியாமளா என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இந்தியாவின் வடபகுதியில் சியாமளா தேவி என்று அறியப்படுகிறார். இதற்கு நீலம் கலந்த பச்சை நிறம் என்று பொருளாகும். இந்த தேவி சாக்த வழிபாட்டில் சப்தமாதாக்களில் ஒருவராகவும், தசமகா வித்தியாக்களில் ஒருவராகவும் அறியப்படுகிறார்.[1]

மதங்க முனிவர்[தொகு]

மதங்க முனிவர் கடுமையாக தவம் செய்தார். அவருடைய தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் மதங்கருக்கு காட்சியளித்தார். அப்பொழுது மதங்கர் "அனைவருக்கும் தந்தையான ஈசனே, தாங்கள் எனக்கு உறவாக இருக்கும் வரம் தர வேண்டும்" என்று வேண்டினார். அவ்வாறே சிவபெருமானும் பார்வதி தேவி மாதங்கியாக அவருக்கு பிறப்பார் என்றும், மாதங்கியை தான் மணம் முடிப்பதாகவும் வரம் தந்தார்.

மாதங்கி, சிவன் - திருமணம்[தொகு]

மாதங்கி சிவபெருமான் திருமணம் திருவெண்காட்டில் நிகழ்ந்தது. அப்பொழுது மாதங்கியின் வீட்டார், சிவபெருமானுக்கு சீர் செய்யாததை கண்டு தேவர்கள் கேலி பேசினர். அதனை தடுத்த சிவபெருமான், சீர் கொடுப்பதும், பெறுவதும் தவறு என்று உரைத்தார். ஆனால் திருமணத்தின் சடங்கு என தேவர்கள் வாதிட்டனர். அவர்களை சாந்தம் செய்வதற்காக கையிலையில் உள்ள பெருஞ்செல்வத்தினை நந்தி தேவரிடம் கூறி எடுத்துவரும்படி செய்தார்.

இப்புராணத்தை திருநாங்கூர் மாதங்கீஸ்வரர் கோயில் தலபுராணம் விவரிக்கிறது.[2]

துதிகள்[தொகு]

 1. சியாமளா தண்டகம்
 2. சியாமளா நவரத்னமாலை
 3. சியாமளா ஆவரணம்
 4. சியாமளா அஷ்டோத்திரம்
 5. சியாமளா கவசம்
 6. ராஜமாதங்கி மந்த்ரம்
 7. மாதங்கி ஸ்தோத்திரம்
 8. மாதங்கி ஸுமுகி கவசம்
 9. மாதங்கி ஹ்ருதயம்
 10. மாதங்கி ஸஹஸ்ரநாமம்
 11. ஸ்யாமளா ஸஹஸ்ரநாமம்

தொடர்புடைய இணைப்புகள்[தொகு]

ஆதாரங்களும், மேற்கோள்களும்[தொகு]

 1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=15795
 2. http://koyil.siththan.com/archives/category/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/227

வெளி இணைப்புகள்[தொகு]

சியாமளா வழிபாடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதங்கி&oldid=2657542" இருந்து மீள்விக்கப்பட்டது