அசாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அஸ்ஸாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
அசாம்

অসম

—  State  —

முத்திரை
இருப்பிடம்: அசாம் , இந்தியா
அமைவிடம் 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77ஆள்கூற்று: 26°09′N 91°46′E / 26.15°N 91.77°E / 26.15; 91.77
நாடு  இந்தியா
மாவட்டங்கள் 27
நிறுவப்பட்ட நாள் 15 ஆகஸ்ட்-1947
தலைநகரம் திஸ்பூர்
மிகப்பெரிய நகரம் குவஹாத்தி
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் ஸர்பாநந்த ஸோநொவால்
சட்டமன்றம் (தொகுதிகள்) ஓரவை (126)
மக்களவைத் தொகுதி அசாம்
மக்கள் தொகை

அடர்த்தி

3,12,05,576 (14வது) (2011)

340/km2 (881/சது மை)

ம. வ. சு (2005) Green Arrow Up Darker.svg
0.534 (medium) (22வது)
கல்வியறிவு 72.19% (9வது)
மொழிகள் அசாமியம்; வங்காளம் (in the Barak Valley); Bodo (in Bodoland)[1]
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு 78550 கிமீ2 (30328 சதுர மைல்)
ஐ. எசு. ஓ.3166-2 அசாம்
இணையதளம் Assam.gov.in


அசாம் அல்லது அஸ்ஸாம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இந்த மாநிலத்தின் தலைநகர் திஸ்பூர். குவஹாத்தி இம்மாநிலத்தின் முக்கிய நகரம் ஆகும். அசாமிய மொழியும், போடோ மொழியும் அசாமின் அதிகாரப்பூர்வ மொழிகளாகும்.

அசாம் மாநிலம் தெற்கு இமய மலையின் கிழக்குப் பகுதியில், பிரம்மபுத்திரா மற்றும் பாரக் ஆகிய ஆறுகளின் பாயும் பள்ளத்தாக்கையும், அதனை ஒட்டி அமைந்துள்ள மலைகளையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் பரப்பளவு சுமார் 78,438 சதுர கிலோமீட்டர்கள். அசாம் மாநிலத்தை ஒட்டியுள்ள 6 மாநிலங்களையும், அசாம் மாநிலத்தையும் , ஏழு சகோதரிகள் என்று அழைப்பர். அவையாவன: அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேகாலயா.

இவ்வேழு மாநிலங்களும் மற்ற இந்திய மாநிலங்களோடு மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஒரு சிறிய பகுதியின் மூலமாகவே நிலவழியாக இணைக்கப்படுகின்றன. இப்பகுதி சில்லிகுறி குறுவழி என்றும், கோழி கழுத்து என்றும் அழைக்கப்படுகிறது .[2] அசாம் மாநிலம் பூட்டான் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுடன் சர்வதேச எல்லைகளையும் கொண்டுள்ளது.

அசாம் மாநிலம், 1826 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் யாண்டபோ உடன்படிக்கையால் இந்தியாவின் அங்கமானது.

தேயிலை உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலம், பெட்ரோலியம், பட்டு ஆகியவற்றின் உற்பத்தியிலும் சிறந்து விளங்குகிறது. உலகில் வேறெங்கிலும் காண கிடைக்காத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் அசாம் காடுகளில் காணப்படுகின்றன. உதாரணமாக, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், புலி, ஆசிய யானை ஆகிய அரியவகை விலங்குகள் இம்மாநிலக் காடுகளில் வாழுகின்றன. இதன் காரணமாக, இவ்விலங்கினங்களைக் காண உலகமெங்கிலும் இருந்து இயற்கை ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் அசாம் மாநிலத்திற்கு வருகை தருகின்றனர். குறிப்பாக, காசிரங்கா பகுதியும், மணாஸ் பகுதியும் உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன[3]. முன்காலத்தில் அசாம் மாநிலம் அதன் காட்டு வளத்திற்கும், காட்டில் இருந்து கிடைக்கும் பொருள்களுக்கும் புகழ்பெற்றிருந்தது. தொடர்ச்சியான காட்டழிப்பால் இம்மாநிலத்தின் காடுகளின் நிலை பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. உலகின் அதிக மழைபெய்யும் இடங்களில் ஒன்றான அசாம் மாநிலம், மாபெரும் ஆறான பிரம்மபுத்திரா ஆற்றினால் வளம் பெறுகிறது

அசாமிய தேயிலை உலகப்புகழ் பெற்றது.

பெயர்க்காரணம்[தொகு]

அசாம் மகாபாரதத்தில் பிரகியோதிசா என்ற பெயரிலும், காமரூபா அரசு என்ற பெயரிலும் அழைக்கப் படுகிறது. அசாம் என்ற பெயர் இப்பகுதியை 1228 முதல் 1826 வரை ஆண்ட அகோம் அரசுகளால் சூட்டப்பட்டதாகத் தெரிகிறது..[4] ஆங்கிலேய ஆதிக்கத்தின்கீழ் 1838 ஆம் ஆண்டு வந்த அசாம் நிலப்பகுதி, அதே பெயரிலேயே அழைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ஆம் தியதி இன்றைய அசாம் அரசு மாநிலத்தின் பெயரை அசோம் என மாற்றியமைத்தது. ,[5] . இம்மாற்றம் மக்களிடையே பரவலான எதிர்ப்பை உருவாக்கியது.[6]

புவியியல்[தொகு]

பல புவியியல் ஆய்வுகளின் முடிவில் அசாம் மாநிலத்தின் வற்றாஆறான பிரம்மபுத்திரா ஆறு, இமயமலை தோன்றுவதற்கு முன்னரே தோன்றியதாகக் கண்டறிந்துள்ளனர். அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மிகவேகமாக பாயும் பிரம்மபுத்திரா ஆறானது அசாம் மாநிலத்தில் வேகம் குறைந்து, பல கிளை ஆறுகளாக பிரிந்து, சுமார் 80 முதல் 100 கிலோமீட்டர் அகலமும், 1000 கிமீ நிளமும் கொண்ட பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கை வளம் செய்கிறது.

மாவட்டங்கள்[தொகு]

அசாம் மாநிலத்தில் 27 மாவட்டங்கள் உள்ளன, அவை பின்வருமாறு,

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அசாம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 31,205,576 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 85.90% மக்களும்; நகர்புறங்களில் 4.10% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.07% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 15,939,443 ஆண்களும் மற்றும் 15,266,133 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 958 வீதம் உள்ளனர். 78,438 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 398 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 72.19 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 77.85 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 66.27 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4,638,130 ஆக உள்ளது. [7]

சமயம்[தொகு]

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 19,180,759 (61.47 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 10,679,345 (34.22 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 20,672 (0.07 %), சமண சமய மக்கள் தொகை 25,949 (0.08 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,165,867 (3.74 %) ஆகவும், , பௌத்த சமய மக்கள் தொகை 54,993 (0.18 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 27,118 (0.09 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 50,873 (0.16 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான அசாமிய மொழியுடன் போடோ மொழி, இந்தி, வங்காளம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது.

போக்குவரத்து[தொகு]

தொடருந்து[தொகு]

கௌஹாத்தி தொடருந்து நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடன் இருப்புப்பாதை]] மூலம் தொடருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.[8]

தேசிய நெடுஞ்சாலைகள்[தொகு]

1126 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 31 வடகிழக்கு இந்தியாவின் நுழைவாயிலாக உள்ளது.

வானூர்தி நிலையம்[தொகு]

கௌஹாத்தி லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் நாட்டின் மற்றும் உலகின் பல நகரங்களுடன் இணைக்கிறது.

வரலாறு[தொகு]

முன் வரலாறு[தொகு]

கற்காலத்தில் அசாம் பகுதி ஒருகிணைந்த பகுதியாக இருந்து உள்ளது. இதணை அப்பொழுது வாழ்ந்த மக்களின் பரிமாற்ற பொருட்கள் விளக்குகிறது.ஆனால் இரும்பு மற்றும் வெண்கல காலத்தில் வணிகத்திற்கான காலச் சான்று எதுவும் இல்லை.[1]

புராண கதை[தொகு]

முன்பு அசாம் பகுதியை தனவ அரச மரபை சேர்ந்த மஹிரங்க தனவரால் ஆட்சி செய்யப்பட்டது. இவர் ஆட்சியை நரகரால் அழிக்கப்பட்டது. நரக்கா மற்றும் அதன் ஆட்சியாளர்கள் கிருஷ்ண என்பவரால் கொல்லபட்டார்கள். பிறகு நரக்காவுடைய மகன் பகதட அரசனானார்.

பண்டைய காலம்[தொகு]

Kamarupa map.png
Madan kamdev ruins.JPG

சமுத்திர குப்தரின் 4வது நூற்றாண்டு கல்வெட்டுகள் கமருப(மேற்கு அசாம்) மற்றும் தேவாக(மத்திய அசாம்) பகுதினை குப்த பேரரசின் எல்லைகளாக குறிபிடுகின்றன.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Commissioner Linguistic Minorities accessdate=1/12/2010".
  2. Dixit 2002
  3. World Heritage Centre 2007
  4. Sarma, Satyendra Nath (1976) அசாமிய Literature, Harrassowitz, Wiesbaden, p2. “While the Shan invaders called themselves Tai, they came to be referred to as Āsām, Āsam and sometimes as Acam by the indigenous people of the country. The modern அசாமிய word Āhom by which the Tai people are known is derived from Āsām or Āsam. The epithet applied to the Shan conquerors was subsequently transferred to the country over which they ruled and thus the name Kāmarūpa was replaced by Āsām, which ultimately took the Sanskritized form Asama, meaning ‘unequalled, peerless or uneven’”
  5. Times News Network, February 28, 2006
  6. Editorial, The அசாம் மாநிலம் Tribune, January 6, 2007.
  7. [http://www.census2011.co.in/census/state/assam.html Assam Population 2011 ]
  8. http://erail.in/guwahati-railway-station
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்&oldid=2608961" இருந்து மீள்விக்கப்பட்டது