ஹொஜாய் மாவட்டம்
ஹொஜாய் மாவட்டம் | |
|---|---|
அசாம்]] மாநிலத்தில் ஹொஜாய் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | அசாம் |
| நிறுவிய நாள் | 15 ஆகஸ்டு 2015 |
| தலைமையிடம் | ஹொஜாய் |
| வருவாய் வட்டங்கள் | 3 |
| அரசு | |
| • மக்களவைத் தொகுதி | நவ்கோங் மக்களவைத் தொகுதி |
| • சட்டமன்றத் தொகுதிக்ள் | ஹொஜாய், ஜமுனமுக் மற்றும் லும்டிங் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 9,31,218 |
| நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
| அலுவல் மொழி | அசாமிய மொழி, சில்ஹெட்டி மொழி |
| இணையதளம் | hojai |
ஹோஜாய் மாவட்டம் (Hojai District) அசாம் மாநிலத்தின் நவகோன் மாவட்டத்தின் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டு இப்புதிய மாவட்டம் 15 ஆகஸ்டு 2015 அன்று நிறுவப்பட்டது.[1][2] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹொஜாய் நகரம் ஆகும்.
வருவாய் வட்டங்கள்
[தொகு]ஹோஜாய் மாவட்டம் ஹொஜாய், தோபோகா மற்றும் லங்கா எனும் மூன்று வருவாய் வட்டங்ளைக் கொண்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஹோஜாய் மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 9,31,218 ஆகும். மக்கள்தொகையில் இசுலாமியர்கள் 4,99,565 (53.65%) மற்றும் இந்துக்கள் 4,24,065 (45.53%) ஆகவுள்ளனர். 1971 இந்திய-பாகிஸ்தான் போரின் போது இலட்சக்கணக்கான வங்காளதேச முஸ்லீம்கள் சில்ஹெட் மாவட்டத்திலிருந்து இம்மாவட்டத்தில் புலம்பெயர்ந்தனர்.
| வட்டம் | மொத்தம் | இந்துக்கள் | முஸ்லீம்கள் | இந்து % | முஸ்லீம் % |
|---|---|---|---|---|---|
| ஹோஜாய் | 228,530 | 135,377 | 92,590 | 59.24% | 40.52% |
| தோபோகா | 303,767 | 37,872 | 265,366 | 12.47% | 87.35% |
| லங்கா | 398,921 | 250,816 | 141,609 | 62.87% | 35.50% |
| மொத்தம் (2011) | 931,218 | 424,065 | 499,565 | 45.53% | 53.65% |
அரசியல்
[தொகு]ஹோஜாய் மாவட்டம் ஜமுனாமுக், ஹோஜாய், லும்டிங் என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. நவகோங் மக்களவைத் தொகுதியில் இம்மாவட்டம் உள்ளது.