சராய்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராய்காட்
শৰাইঘাট
Saraighat
ஊர்
சராய்காட் பாலம்
சராய்காட் பாலம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்காமரூப் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்அசாமிய மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

சராய்காட், இந்திய மாநிலமான அசாமின் குவகாத்திக்கு அருகில் உள்ள ஊர். இது பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் உள்ள பாலம் சாலைவழிப் போக்குவரத்துக்கும், ரயில்வழிப் போக்குவரத்தும் ஏதுவாக இருக்கிறது.

இது 1962ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய பிரதமராக இருந்த ஜவகர்லால் நேருவால் திறந்து வைக்கப்பட்டது. லச்சிட் போர்புக்கன் பூங்காவும், சிலாராய் பூங்காவும் பாலத்துக்கு அருகில் உள்ளன.[1] இந்த பாலம் வடகிழக்கு எல்லைப்புற இரயில்வேயின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது.[2]

சராய்காட் பாலத்தின் ஐம்பதாண்டு நிறைவை ஒட்டி எடுக்கப்பட்ட படம்

சான்றுகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சராய்காட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்காட்&oldid=3356887" இருந்து மீள்விக்கப்பட்டது