சராய்காட் போர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராய்காட் போர்
அகோம்-முகலாயர் பிணக்குகள் பகுதி
Battle of saraighat.svg
நாள் மார்ச், 1671
இடம் சராய்காட், அசாம், இந்தியா
அகோம் பேரரசுக்கு வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
குவகாத்தியை முகலாயர்களிடமிருந்து மீண்டும் அகோம் பேரரசு கைப்பற்றுதல்
பிரிவினர்
Ahom insignia plain.svg அகோம் பேரரசு
ஆதரவாளர்கள்
Flag of the Mughal Empire.png முகலாயப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
* சக்கரதுவஜ சின்கா * முதலாம் ராம் சிங்
  • முனவர் கான்  
பலம்
100,000 [1] (காலாட்படை 46,000, விற்படை 18,000) [2]

சராய்காட் போர் (Battle of Saraighat), தற்கால அசாம் பகுதியை ஆண்ட அகோம் பேரரசுக்கும், முகலாயப் பேரரசுக்கும் மார்ச் 1671ஆம் ஆண்டில் சராய்காட் எனுமிடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றுப் பகுதியில் நடைபெற்ற கப்பல் போர் ஆகும்.[3] அகோம் பேரரசின் படைகளுக்கு படைத்தலைவர் லச்சித் பர்பூக்கன்[4] மற்றும் முகலாயப் படைகளுக்கு முதலாம் ஜெய் சிங்கின் மகன் முதலாம் ராம் சிங் தலைமை வகித்தனர்.

இப்போரில் அகோம் பேரரசின் படைகள் கொரில்லா போர்முறையில், முகலாய கப்பல் படைகளை வென்று, குவகாத்தியை மீண்டும் கைப்பற்றியது.[5]இது அகோம் பேரரசுக்கு எதிரான முகலாயர்களின் இறுதிப் போர் ஆகும்.

போரின் பின்னணி[தொகு]

1586-ஆம் ஆண்டில் காமதா இராச்சிய மன்னர் நர நாராயணன் இறந்த பிறகு காமதா இராச்சியத்தின் கிழக்குப் பகுதிகளை அகோம் இராச்சியத்தினர் கைப்பற்றினர். எனவே காமதா இராச்சியத்தின் மேற்கு பகுதியில் உள்ள கூச் பெகர் நகரத்தை தலைநகராகக் கொண்டு கூச் பெகர் இராச்சியத்தை நிறுவினர்.

1587 இல் கூச்பெகர் இராச்சிய மன்னர் நர நாராயண இறந்த பிறகு, அவரது மகன் லெட்சுமி நாராயணன் மற்றும் மருமகன் ரகுதேவ் இராச்சியத்தைப் பிரித்துக் கொண்டு மனக்கசப்புடன் ஆண்டனர். முகலாயர்கள் லெட்சுமி நாராயணனுடன் கூட்டணி அமைத்தனர். 1602ல் முகலாயர்கள் ரகுதேவின் மகன் பரிசித்து நாராயணனை கைது தில்லிக்கு அனுப்பினர். ஆனால் அவரது சகோதரர் பாலி நாராயணன் அகோம் பேரரசில் தஞ்சம் புகுந்தார். அகோம்கள் தங்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையே கோச் இராச்சியத்தை ஒரு இடையகமாக வைத்திருக்க ஆர்வமாக இருந்தனர். முதல் முகலாய-அகோகம் சண்டை சம்தாராவில் 1615ல் நடைபெற்றது. போரின் முடிவில் அகோம்-முகலாயர் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தத்தின்படி பிரம்மபுத்திரா ஆற்றின் வடகரையில் அகோம் படைகளும், தென் கரையில் முகலாயர் படைகளும் நிலை கொண்டது.

1658ல் முகலாயப் பேரரசர் ஷாஜகான் வீழ்ந்த பிறகு, வாரிசுப் போரை சாதகமாக பயன்படுத்தி வாரிசுப் போரை சாதகமாகப் பயன்படுத்தி, லெட்சுமி நாராயணன் கூச் பெகர் இராச்சியத்தை ஆக்கிரமிக்க முயன்றார். ஆனால் அகோம் மன்னர் ஜெயத்வாஜ் சின்கா, லெட்சுமி நாராயனனை துப்ரிக்கு அப்பால் பின்னுக்குத் தள்ளி துப்ரியை கைப்பற்றினர். அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்த போது, 1660ல் அகோம் பேரரசை கைப்பற்ற கடற்படைத் தலைவர் மீர் ஜூம்லா[6] மற்றும் வங்காள ஆளுரர் இரண்டாம் ஷா சூஜா அனுப்பி வைக்கப்பட்டனர்.

மிர் ஜும்லா 1661 இல் கப்பல்களை அணிவகுத்து, அகோம்களைத் தோற்கடித்து, இறுதியாக அகோம் தலைநகரைக் கைப்பற்றினார். இறுதியில் அகோம் பேரரசின் படைத்தலைவர் லச்சித் பர்பூக்கன் கொரில்லா போர்முறையில் முகலாயப் படைகளைத் தாக்கி போரில் வெற்றி பெற்று குவாகாத்தியை மீண்டும் கைப்பற்றினர்.

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • Barua, Ajit, Lachit Borphukan, March 10, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது, April 14, 2009 அன்று பார்க்கப்பட்டது
  • Baruah, S L (1986), A Comprehensive History of Assam, Munshiram Manoharlal
  • Bhuyan, Surya Kumar (1971), Lachit Borphukan (in Assamese), Assam Publication Board, Guwahati
  • Gogoi, Padmeshwar (1968), The Tai and the Tai kingdoms, Guwahati: Gauhati University
  • Kakoty, Sanjeeb (2003), Technology, production and Social Formation in the evolution of the Ahom State, Regency Publications, New Delhi
  • Sarkar, J. N. (1992), "Chapter VIII Assam-Mughal Relations", in Barpujari, H. K. (ed.), The Comprehensive History of Assam, 2, Guwahati: Assam Publication Board, pp. 148–256
  • Sinha, Lt Gen S K, Emulate the spirit and skill of Lachit Borphukan, October 25, 2004 அன்று மூலம் பரணிடப்பட்டது, February 19, 2005 அன்று பார்க்கப்பட்டது
  • Sarkar, Jadunath (1994). A History of Jaipur:1503-1938. Orient Longman. பக். 146–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125003335. https://books.google.com/books?id=O0oPIo9TXKcC&q=ahoms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சராய்காட்_போர்&oldid=3632634" இருந்து மீள்விக்கப்பட்டது