சராய்காட் போர் நினைவுப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராய்காட் போர் நினைவுப் பூங்காவின் நுழிவாயில்
சராய்காட் போர் நினைவுப் பூங்காவில் சராய்காட் போர் தொடர்பான கல்வெட்டு

சராய்காட் போர் நினைவுப் பூங்கா (Saraighat War Memorial Park) இந்தியாவின் அசாம் மாநிலத்திலுள்ள குவகாத்தி நகரின் வடக்குப் பகுதியில் இருக்கும் அக்யாதுரி நகரில் பிரம்மபுத்திரா நதியின் வடகரையில் அமைந்துள்ளது.[1][2][3] சராய்காட் போருடன் தொடர்புடைய நினைவுச்சின்னங்களை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அசாமின் குவாகாத்தி பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டியது.

வரலாறு[தொகு]

1671 ஆம் ஆண்டில் அகோம் இனக்குழுவினருக்கும் முகலாயர்களுக்கும் இடையில் இந்த சராய்காட் எனுமிடத்தில் போர் நடந்தது. அப்போது அகோம் இராணுவத்தின் படைத்தளபதியாக லச்சித் பர்பூக்கன் தலைமையில் அகோம் பேரரசு வெற்றி பெற்றது. பூங்காவில் போர் தோரணையில் அகோம் வீரர்களின் நான்கு வெண்கல சிலைகள் உள்ளன. போரின் ஒரு பகுதியை விவரிக்கும் வெண்கல பட்டயம் ஒன்றும் இங்குள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள கலைகள் அனைத்தும் சிற்பி பிரேந்திர சின்கா மற்றும் சாந்திநிகேதன் நிபுணர்கள் குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும். [1][2]

சராய்காட் போர் நினைவுப் பூங்காவில் இடம்பெற்றுள்ள அகோம் வீரர்களின் வெண்கலச் சிலைகள்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Saraighat War Memorial Park, Agyathuri". GMDA. Guwahati Metropolitan Development Authority, Government of Assam. பார்க்கப்பட்ட நாள் 20 June 2019.
  2. 2.0 2.1 "Saraighat memorial park opens today". The Telegraph (Kolkata).
  3. "Saraighat War Memorial Park". Assam, India: Government of Assam. Archived from the original on 2020-12-07. பார்க்கப்பட்ட நாள் 2020-11-28.