லச்சித் பர்பூக்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லச்சித் பர்பூக்கன்
Lachit Barphukan's maidam2.JPG
அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் நகரத்தில் லச்சித் பர்பூக்கானின் கல்லறைக் கட்டிடம் மற்றும் சிலை
இறப்புதற்கால ஜோர்ஹாட், அசாம் (அகோம் பேரரசு)
சார்புஅகோம் பேரரசு
தரம்அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர்
போர்கள்/யுத்தங்கள்சராய்காட் போர்

லச்சித் பர்பூக்கன் (Lachit Barphukan), வடகிழக்கு இந்தியாவின் அசாம் பகுதிகளை ஆண்ட அகோம் பேரரசின் தலைமைப் படைத்தலைவர் ஆவார். மார்ச் 1671ஆம் ஆண்டில் அகோம் பேரரசின் கடற்படைத் தலைவர் லச்சித் பர்பூக்கன் தலைமையில், முகலாயப் பேரரசின் படைத்தலைவர் முதலாம் ராம் சிங்க்கு எதிராக நடைபெற்ற சராய்காட் போரில் முகலாயர்களை கொரில்லா முறை தாக்குதலில் வென்று, குவாகாத்தி நகரத்தை கைப்பற்றினார்.[1] [2][3]இது அகோம் பேரரசுக்கு எதிரான முகலாயர்களின் இறுதிப் போர் ஆகும். அகோம் பேரரசின் பர்பரூவா தகுதியில் படைத்தலைவரான மோமாய் தமுலி என்பவருக்கு பிறந்தவர் லச்சித் பர்பூக்கன்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லச்சித்_பர்பூக்கன்&oldid=3632632" இருந்து மீள்விக்கப்பட்டது