தர்ரங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தர்ரங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது இந்த மாநிலத்தின் 35 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் மங்கல்தோய் ஆகும். இது அருகில் உள்ள சோனித்பூர் மாவட்த்தில் இருந்து,1983 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி தனியாக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.[1]

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக மங்கல்தோய் நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 3481 சதுர கிலோமீடராகும்.[2]இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பூட்டான் நாடும், கிழக்குப் பகுதியில் சோனித்பூர் மாவட்டமும், தெற்குப் பகுதியில் மரிகாவொன் மாவட்டமும், மேற்குப் பகுதியில் கம்ருப் மாவட்டமும், எல்லையாக அமைந்துள்ளது. இந்த மாவட்டம் நான்கு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[3]இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு தங்கலா, சிபாஜர், ரோவ்தா, காருபேடியா, களைகவோன், மங்கல்தோய், மற்றும் தல்கவோன்.

மக்கள்தொகை ஆய்வு[தொகு]

2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த மாவட்டத்தில் மொத்தம் பேர் உள்ளனர். 908,090 பேர் உள்ளனர். 19.51 சதவிகிதம் ஆகவும், பாலின விகிதாச்சாரம் 923 ஆகவும், மக்களின் கல்வியறிவு 64.55 சதவிகிதம் ஆகவும், மக்களின் இன நெருக்க அடர்வு 491 ஆகவும் உள்ளது.

,[4]

சுற்றுலாத் தளங்கள்[தொகு]

இந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக பைரப்குந்து உள்ளது. பூட்டான் நாட்டுடன் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த இடம் அனைவரும் காணவேண்டிய ஒரு இடமாகும்.1990 ஆம் ஆண்டு இந்த மாவட்டத்தில் மானசு தேசியப் பூங்கா தொடங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. 2011-10-11 அன்று பார்க்கப்பட்டது.
  2. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. 
  3. "List of Assembly Constituencies showing their Revenue & Election District wise break - up" (PDF). Chief Electoral Officer, Assam website. 22 மார்ச் 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 26 September 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  5. Indian Ministry of Forests and Environment. "Protected areas: Assam". ஆகஸ்ட் 23, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. September 25, 2011 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்ரங்_மாவட்டம்&oldid=3583861" இருந்து மீள்விக்கப்பட்டது