காசிரங்கா தேசியப் பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிரங்கா தேசியப் பூங்கா
Map showing the location of காசிரங்கா தேசியப் பூங்கா
Map showing the location of காசிரங்கா தேசியப் பூங்கா
அமைவிடம்கோலாகாட் மாவட்டம் மற்றும் நகாமோ மாவட்டம், அசாம், இந்தியா
கிட்டிய நகரம்ஜோர்காட்
ஆள்கூறுகள்26°40′00″N 93°21′00″E / 26.66667°N 93.35000°E / 26.66667; 93.35000ஆள்கூறுகள்: 26°40′00″N 93°21′00″E / 26.66667°N 93.35000°E / 26.66667; 93.35000
பரப்பளவு430 சதுர கிலோமீட்டர்கள் (170 sq mi)
நிறுவப்பட்டது1974
நிருவாக அமைப்புஇந்திய அரசு, அசாம் அரசு
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
காசிரங்கா தேசியப் பூங்கா
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைஇயற்கை
ஒப்பளவுix, x
உசாத்துணை337
UNESCO regionஆசியா-பசிபிக்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1985 (9th தொடர்)

காசிரங்கா தேசியப் பூங்கா (Kaziranga National Park :Assamese: কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যান, Kazirônga Rastriyô Uddan, pronounced [kazirɔŋɡa rastrijɔ udːan) அல்லது காசிரங்கா வனவிலங்கு காப்பகம் இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ள தேசியப் பூங்காவாகும். சுமார் நானூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு விரிந்திருக்கும் காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் இந்தியச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். உலகிலேயே இந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்கள் வசிக்கும் காசிரங்கா காடுகள்[1] , அஸ்ஸாமின் சுற்றுலாச் சிறப்புகளில் முன்னிலை வகிப்பவை. அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குள்ளன. இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகைப் பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.[2]

வரலாறு[தொகு]

மேரி விக்டோரியா லெயிட்டர் கேர்சன், கெட்லெசுட்டனின் பரனசு கேர்சன், இப்பகுதிக் காண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்கான இயக்கத்தைத் தொடங்கியவர்

பிரித்தானிய இந்தியாவின் ஆளுநராக இருந்த கர்சன் பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை விலங்குகளைப் பார்த்து வியந்த அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை விலங்குகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது.[3] On 1 June 1905, the Kaziranga Proposed Reserve Forest was created with an area of 232 km2 (90 sq mi).[4] சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.[5]

காசிரங்கா[தொகு]

மிகப்பெரிய பரப்பளவில் இருக்கும் மாவட்டம் என்றாலும், ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களைக் காணமுடிகிற அற்புத சரணாலயம் தவிர்த்து இந்த ஊரில் பெரிய அளவில் குடியிருப்புகளோ, கடைகண்ணிகளோ கிடையாது.

தங்கும் விடுதிகள்[தொகு]

உலகளாவிய இயற்கை ஆர்வலர்களைக் கவரும் சுற்றுலாத்தலம் என்பதால் பல்வேறு தரங்களில் நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. சுற்றுலாக் காலத்தில் அறுநூறு முதல் ஆயிரத்து ஐந்நூறு வரை வாங்கிக் கொண்டு காட்டேஜ் என்கிற பெயரில் வெறும் கட்டில் மெத்தை போர்வையும் இணைந்த குளியலறையும் மட்டும் கொண்ட அறையை வாடகைக்கு விடுகிறார்கள். பொதுவாக அறைகளில் சுழல்விசிறியோ தொலைக்காட்சியோ இருப்பதில்லை.

உலக பாரம்பரிய சின்னம்[தொகு]

1985ஆம் ஆண்டு இந்த பூங்கா உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது.[6]

உரியகாலம்[தொகு]

அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் காண்டாமிருகங்கள் அடர்ந்த உள்வனங்களில் இருந்து ஓரளவு வெளிப்பக்கமாக வரும். அந்தச் சமயத்தில் தான் சுற்றுலாவும் சூடுபிடிக்கிறது. அதோடு மழைக்காலமும் இங்கே அந்தச் சமயத்தில் முடிந்து விடுவதால், வனத்தினுள் போவதற்கான பாதைகள் சேறு சகதி என்று வழுக்கல் இல்லாமல் இருக்கும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kaziranga National Park
என்பதின் ஊடகங்கள் உள்ளன.