ராமப்பா கோயில்

ஆள்கூறுகள்: 18°15′33″N 79°56′36″E / 18.25917°N 79.94333°E / 18.25917; 79.94333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ராமப்பா கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலுங்கானா
மாவட்டம்:ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்
அமைவு:பாலம்பேட் கிராமம்
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:ரேச்சர்ல ருத்திரன்
கட்டடக் கலைஞர்:கதம்பர் கட்டிடக் கலை

ராமப்பா கோயில் அல்லது இராமலிங்கேஸ்வரர் கோயில் (Ramappa Temple or Ramalingeswara), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின், ஜெயசங்கர் பூபாலப்பள்ளி மாவட்டத்தில், பாலம்பேட் கிராமத்தில் உள்ளது.

இராமலிங்கேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயிலை, கிபி 11ம் நூற்றாண்டில் கட்டியவர் காக்கத்தியர் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் ஆவார்.

இக்கோயிலை யுனெஸ்கோ நிறுவனம் சூலை 2021-இல் உலகப் பாரம்பரியப் பண்பாட்டுக் களமாக அறிவித்துள்ளது.[1]

அமைவிடம்[தொகு]

காக்கத்தியர்களின் தலைநகரமான வாரங்கல் நகரத்திலிருந்து 77 கிமீ தொலவிலும், மாநிலத் தலைநகரம் ஐதராபாத்திலிருந்து 157 கிமீ தொலைவிலும் ராமப்பா கோயில் உள்ளது. [2]

இக்கோயிலின் 1213ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்பின் படி, காக்காத்திய மன்னர் கணபதி தேவாவின் ஆட்சிக்காலத்தில், அவரது தலைமைப் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவர் இக்கோயிலைக் கட்டியதாக அறியப்பாடுகிறது.[3]

இக்கோயில் அழகிய சிற்பங்களுடன் செம்மணற்கலால் கட்டப்பட்டுள்ளது. மேலும் கோயிலைத் தாங்கும் தூண்கள் கருங்கற்களால் நிறுவப்பட்டுள்ளது. [4]கோயில் கருவறை செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.[5] இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை சீரமைத்தும், பராமரித்தும் வருகிறது. .[6]

கோயில் காட்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ramappa Temple: How a site is selected for World Heritage List
  2. "The Shiva temples at Palampet" இம் மூலத்தில் இருந்து 2006-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061018203824/http://www.indiayogi.com/content/temples/palampet.asp. பார்த்த நாள்: 2006-09-11. 
  3. Gollapudi Srinivasa Rao. "Ramappa temple never fails to surprise visitors". The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/ramappa-temple-never-fails-to-surprise-visitors/article6745526.ece. பார்த்த நாள்: 2015-01-01. 
  4. Michell, 385
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171001082914/http://www.telanganatourism.gov.in/partials/destinations/divine-destinations/warangal/ramappa-temple.html. 
  6. "Warangal Temples, Telangana" இம் மூலத்தில் இருந்து 2006-08-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060818130659/http://www.cultureholidays.com/Temples/waragal.htm. பார்த்த நாள்: 2006-09-11. 
  • Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, 1989, Penguin Books, ISBN 0140081445

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமப்பா_கோயில்&oldid=3569634" இருந்து மீள்விக்கப்பட்டது