உள்ளடக்கத்துக்குச் செல்

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1972 இல் உலக பாரம்பரியக் களத்தை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட சாசனத்தை இந்தியா நவம்பர் 14, 1977 இல் ஏற்றுக் கொண்டது[1] இந்தியா உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2018 வரை இந்தியாவில் உலகப் பாரம்பரியக் களங்களாக 37 இடங்கள் யுனெசுகோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] இவை 1972ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட யுனெசுகோ உலக பாரம்பரிய நெறிமுறையில் வரையறுக்கப்பட்டபடி பண்பாடு அல்லது இயற்கைச் சிறப்புமிக்க இடங்களாகும்[3].

இந்தியாவின் முதல் இரண்டு பாரம்பரியக் களங்களாக ஆக்ரா கோட்டையும் அஜந்தா குகைகளும் 1983ஆம் ஆண்டு உலகப் பாரம்பரியத்தின் ஏழாவது மாநாட்டில் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மேலும் 27 இடங்கள் பாரம்பரியக் களங்களாக ஏற்கப்பட்டுள்ளன. கடைசியாக இந்தப் பட்டியலில் 2012ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் சேர்க்கப்பட்டது. இந்தியாவின் 29 பாரம்பரியக் களங்களில் 23 பண்பாட்டு பாரம்பரிய இடங்களாகவும் ஏனைய ஆறு இயற்கை பாரம்பரியங்களாகவும் உள்ளன[4]. இந்தப் பட்டியலில் இணைக்கத் தகுதி வாய்ந்ததாக மேலும் 34 இடங்களுக்கு இந்தியா விண்ணப்பித்துள்ளது.[2]

இந்தியாவில் உலக பாரம்பரியக் களங்களின் அமைவிடங்கள்[தொகு]

உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - இந்தியா is located in இந்தியா
இந்தியாவில் உலக பாரம்பரியக் களங்களின் வரைபடம் ()

இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல்[தொகு]

பெயர் ஒளிப்படம் அமைவிடம் குறிப்புகள்
ஆக்ரா கோட்டை (1983)[5] உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
அஜந்தா குகைகள் (1983)[6] மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்
சாஞ்சியிலுள்ள பௌத்த நினைவுச்சின்னங்கள்[7] மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
சம்பானேர்-பாவாகேத் தொல்லியல் பூங்கா[8] குசராத் பண்பாட்டுக் களம்
சத்திரபதி சிவாஜி முனையம் (முன்னதாக விக்டோரியா முனையம்)[9] மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்
கோவாவின் தேவாலயங்களும் மடங்களும்[10] பழைய கோவா, கோவா பண்பாட்டுக் களம்
எலிபண்டா குகைகள்[11] மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்
எல்லோரா குகைகள்[12] மகாராட்டிரம் பண்பாட்டுக் களம்
ஃபத்தேப்பூர் சிக்ரி[13] உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
அழியாத சோழர் பெருங்கோயில்கள்[14] தமிழ்நாடு பண்பாட்டுக் களம்
ஹம்பியிலுள்ள நினைவுச்சின்னங்கள்[15] பெல்லாரி மாவட்டம், கருநாடகம் பண்பாட்டுக் களம்
மாமல்லபுர மரபுச்சின்னங்கள்[16] மகாபலிபுரம், தமிழ்நாடு பண்பாட்டுக் களம்
பட்டடக்கலுவிலுள்ள நினைவுசின்னங்கள்[17] பட்டடக்கல், கர்நாடகம் பண்பாட்டுக் களம்
உமாயூனின் சமாதி[18] தில்லி பண்பாட்டுக் களம்
ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)[19] ஜெய்ப்பூர், இராசத்தான் பண்பாட்டுக் களம்
காசிரங்கா தேசியப் பூங்கா[20] அசாம் இயற்கைக் களம்
கேவலாதேவ் தேசியப் பூங்கா[21] பரத்பூர், இராசத்தான் இயற்கைக் களம்
கஜுராஹோவிலுள்ள நினைவுச்சின்னங்கள்[22] மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
மகாபோதி கோயில், புத்த கயா[23] பீகார் பண்பாட்டுக் களம்
மானசு வனவிலங்கு காப்பகம்[24] அசாம் இயற்கைக் களம்
இந்திய மலைப்பாதை தொடருந்துகள்[25] டார்ஜிலிங் இமாலயன் இருப்புப்பாதை, நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து, கால்கா-சிம்லா தொடர்வண்டிப்பாதை பண்பாட்டுக் களம்
நந்தாதேவி மற்றும் மலர்ப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா[26] சமோலி மாவட்டம், உத்தராஞ்சல் இயற்கைக் களம்
குதுப் மினார் வளாகம்[27] தில்லி பண்பாட்டுக் களம்
செங்கோட்டை வளாகம்[28] தில்லி பண்பாட்டுக் களம்
பீம்பேட்கா பாறை வாழிடங்கள்[29] மத்தியப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
சுந்தர வனத் தேசியப் பூங்கா[30] மேற்கு வங்காளம் இயற்கைக் களம்
கொனார்க் சூரியன் கோயில்[31] பூரி மாவட்டம், ஒடிசா பண்பாட்டுக் களம்
ராணியின் குளம்[32] பதான் மாவட்டம், குசராத்து பண்பாட்டுக் களம்
தாஜ் மகால்[33] உத்தரப் பிரதேசம் பண்பாட்டுக் களம்
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (2012)[34] இயற்கைக் களம்
நாளந்தா பல்கலைக்கழகம் (2016)[35] பிகார் பண்பாட்டுக் களம்

மேற்கோள்கள்[தொகு]

 1. States Parties: Ratification Status, World Heritage Convention, UNESCO
 2. 2.0 2.1 "Properties Inscribed on the World heritage List". UNESCO. பார்க்கப்பட்ட நாள் 2010-10-01.
 3. "The World Heritage Convention". UNESCO. பார்க்கப்பட்ட நாள் September 21, 2010.
 4. Properties inscribed on the World Heritage List, India
 5. UNESCO, "Agra Fort"; retrieved 2012-7-16.
 6. UNESCO, "Ajanta Caves"; retrieved 2012-7-16.
 7. UNESCO, "Buddhist Monuments at Sanchi"; retrieved 2012-7-16.
 8. UNESCO, "Champaner-Pavagadh Archaeological Park"; retrieved 2012-7-16.
 9. UNESCO, "Chhatrapati Shivaji Terminus (formerly Victoria Terminus)"; retrieved 2012-7-16.
 10. UNESCO, "Churches and Convents of Goa"; retrieved 2012-7-16.
 11. UNESCO, "Elephanta Caves"; retrieved 2012-7-16.
 12. UNESCO, "Ellora Caves"; retrieved 2012-7-16.
 13. UNESCO, "Fatehpur Sikri"; retrieved 2012-7-16.
 14. UNESCO, "Great Living Chola Temples"; retrieved 2012-7-16.
 15. UNESCO, "Group of Monuments at Hampi"; retrieved 2012-7-16.
 16. UNESCO, "Group of Monuments at Mahabalipuram"; retrieved 2012-7-16.
 17. UNESCO, "Group of Monuments at Pattadakal"; retrieved 2012-7-16.
 18. UNESCO, "Humayun's Tomb, Delhi"; retrieved 2012-7-16.
 19. UNESCO, "The Jantar Mantar, Jaipur"; retrieved 2012-7-16.
 20. UNESCO, "Kaziranga National Park"; retrieved 2012-7-16.
 21. UNESCO, "Keoladeo National Park"; retrieved 2012-7-16.
 22. UNESCO, "Khajuraho Group of Monuments"; retrieved 2012-7-16.
 23. UNESCO, "Mahabodhi Temple Complex at Bodh Gaya"; retrieved 2012-7-16.
 24. UNESCO, "Manas Wildlife Sanctuary"; retrieved 2012-7-16.
 25. UNESCO, "Mountain Railways of India"; retrieved 2012-7-16.
 26. UNESCO, "Nanda Devi and Valley of Flowers National Parks"; retrieved 2012-7-16.
 27. UNESCO, "Qutb Minar and its Monuments, Delhi"; retrieved 2012-7-16.
 28. UNESCO, "Red Fort Complex"; retrieved 2012-7-16.
 29. UNESCO, "Rock Shelters of Bhimbetka"; retrieved 2012-7-16.
 30. UNESCO, "Sundarbans National Park"; retrieved 2012-7-16.
 31. UNESCO, "Sun Temple, Konârak"; retrieved 2012-7-16.
 32. UNESCO, " Rani-ki-Vav (the Queen’s Stepwell) at Patan, Gujarat, Sun Temple"; retrieved 2012-7-16.
 33. UNESCO, "Taj Mahal"; retrieved 2012-7-16.
 34. UNESCO, "Western Ghats"; retrieved 2012-7-16.
 35. http://whc.unesco.org/en/list/1502/ Archaeological Site of Nalanda Mahavihara (Nalanda University) at Nalanda, Bihar

வெளி இணைப்புகள்[தொகு]