ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்கள்
Bhupalpally Jilla
ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வரைபடம்

ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டம் (Jayashankar Bhupalpally district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். [1][2][3] இம்மாவட்டம் நவம்பர் 2016-இல் வாரங்கல் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது. [4]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பூபாளபள்ளி நகரம் ஆகும்.

புவியியல்[தொகு]

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம் 6,175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. [5]இம்மாவட்டத்தின் வடக்கில் மகாராட்டிராவின் கட்சிரோலி மாவட்டமும், வடகிழக்கில் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டமும், கிழக்கில் பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டமும், தெற்கில் மகபூபாபாத் மாவட்டமும், மேற்கில் வாரங்கல் கிராமபுற மாவட்டம் மற்றும் பெத்தபள்ளி மாவட்டங்களும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தின் மக்கள் தொகை 7,50,000 ஆக உள்ளது. [5]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டம், பூபாளபள்ளி மற்றும் முலுக் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய்க் கோட்டங்களையும், 15 மண்டல்களையும் கொண்டுள்ளது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

ஜெயசங்கர் பூபாளபள்ளி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்;[6]

# பூபாளபள்ளி வருவாய் கோட்டம் # முலுக் வருவாய்க் கோட்டம்
1 பூபாளபள்ளி 1 எட்டூருநகரம்
2 சித்தியால் 2 கோவிந்தராவ் பேட்டை
3 கான்பூர் 3 மங்காப் பேட்டை
4 கட்டாராம் 4 முலுக்
5 மகாதேவபுரம் 5 தாட்வை
6 மகா முத்தாராம் 6 வஜேடு
7 மல்கர்ராவ் [ 7 வெங்கட்பூர்
8 மொகுலப்பள்ளி 8 கன்னைகூடம்
9 பளிமேலா 9 வெங்கடபுரம்
10 ரேகொண்டா
11 தேகுமாத்லா

சட்டமன்றத் தொகுதிகள்[தொகு]

இம்மாவட்டம் பூபாளபள்ளி, மந்தனி, முலுக் (தனி) என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. [7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  2. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  3. "Names of 6 new districts changed" (in en-IN). The Hindu. 22 October 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-telangana/names-of-6-new-districts-changed/article9253888.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  4. "Komaram Bheem Asifabad district". பார்த்த நாள் 11 October 2016.
  5. 5.0 5.1 Rao, Gollapudi Srinivasa (1 November 2016). "Rs.90 crore for new tourism circuit" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/national/telangana/rs90-crore-for-new-tourism-circuit/article9290184.ece. பார்த்த நாள்: 4 November 2016. 
  6. http://newdistrictsformation.telangana.gov.in/uploads/gos-circulars/1476130276325233.Jayashankar.pdf
  7. "Jayashankar district map". பார்த்த நாள் 22 August 2016.

வெளி இணைப்புகள்[தொகு]