வாரங்கல் கிராமபுற மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்
வாரங்கல் கிராமப்புற மாவட்டத்தின் வருவாய்க் கோட்டங்கள்

வாரங்கல் கிராமபுற மாவட்டம் (Warangal Rural district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வாரங்கல் நகரம் ஆகும். [1] வாரங்கல் மாவட்டத்தின் கிராமபுற பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் புதிதாக அக்டோபர், 2016-இல் துவக்கப்பட்டது. [2]

மக்கள் தொகையியல்[தொகு]

2175.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3]வாரங்கல் கிராமபுற மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,16,457 ஆகும்.[3] இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் தெலுங்கு மொழியை பேசுகின்றனர். இசுலாமியர்களில் சிலர் உருது மொழி பேசுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

வாரங்கல் கிராமப்புற மாவட்டம் நரசம்பேட்டை மற்றும் வாரங்கல் (கிராமப்புறம்) என இரண்டு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கோட்டங்கள் 15 வருவாய் வட்டம்|மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. [2]

மண்டல்கள்[தொகு]

வாரங்கல் கிராமப்புற மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள மண்டல்கள்:

# வாரங்கல் கிராமப்புற கோட்டம் நரசம்பேட்டை வருவாய் கோட்டம்
1 அத்மாக்கூர் சென்னராவ்பேட்டை
2 தமேரா துக்கொண்டி
3 கீசுகொண்டா கானாப்பூர்
4 பர்க்கல் நரசம்பேட்டை
5 பார்வதிகிரி நல்லாபெள்ளி
6 இராயபார்தி நெக்கொண்டா
7 சஞ்செம்
8 சியாம்பேட்டை
9 வர்தனாபேட்டை

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]