ஜக்டியால் மாவட்டம்

ஆள்கூறுகள்: 18°42′N 78°54′E / 18.7°N 78.9°E / 18.7; 78.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜக்டியால் மாவட்டம்
மாவட்டம்
ஜக்டியால் மணிக்கூண்டு
ஜக்டியால் மணிக்கூண்டு
Map
Jagtial district

தெலங்கானாவில் ஜக்டியால் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (ஜக்டியால்): 18°42′N 78°54′E / 18.7°N 78.9°E / 18.7; 78.9
நாடு இந்தியா
மாநிலம்தெலங்கானா
நிறுவிய ஆண்டுஅக்டோபர், 2016
தலைமையிடம்ஜக்டியால்
மண்டல்கள்18
அரசு
 • மக்களவைத் தொகுதிநிசாமாபாத்
 • சட்டமன்றத் தொகுதிகள்ஜக்டியால், கொரட்லா, தர்மாபுரி
பரப்பளவு
 • Total2,419.00 km2 (933.98 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total9,88,913
 • அடர்த்தி410/km2 (1,100/sq mi)
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்jagtial.telangana.gov.in
ஜக்டியால் மாவட்டத்தின் வருவாய் கோட்டங்கள்
தெலங்கானாவின் 31 மாவட்டங்களின் வரைபடம்

ஜக்டியால் மாவட்டம் (Jagtial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. [1][2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜக்டியால் நகரம் ஆகும். இதன் பிற நகரங்கள் கொரட்லா, மெட்பள்ளி மற்றும் தர்மாபுரி ஆகும்.

புவியியல்[தொகு]

3,043.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] ஜக்டியால் மாவட்டத்தின் வடக்கில் நிர்மல் மாவட்டம், வடகிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் கரீம்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பெத்தபள்ளி மாவட்டம், மேற்கில் நிசாமாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜக்டியால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,83,414 ஆகும்.[3]

மாவட்ட நிர்வாகம்[தொகு]

ஜக்டியால் மாவட்டம் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்கள் கொண்டுள்ளது. இவ்விரு வருவாய் கோட்டங்களும் 18 மண்டல்களைக் கொண்டுள்ளது. [3]

மண்டல்கள்[தொகு]

ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி வருவாய் கோட்டங்களில் உள்ள மண்டல்களின் விவரம்:[4]

வ. எண் ஜக்டியால் வருவாய் கோட்டம் # மெட்பள்ளி வருவாய் கோட்டம்
1 ஜக்டியால் 1 கொரட்லா
2 ஜக்டியால் கிராமப்புறம் 2 மெட்பள்ளி
3 ராய்க்கல் 3 மல்லப்பூர்
4 சாரங்கபூர் 4 இப்ராகிம்பட்டினம்
5 பீர்பூர் 5 மெடிப்பள்ளி
6 தர்மபுரி 6 கத்லாப்பூர்
7 பக்காரம்
8 பெகடாப்பள்ளி
9 கோலப்பள்ளி
10 மல்லியால்
11 கொடிமியால்
12 வேல்காட்டூர்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jagtial district" (PDF). Chief Commissioner of Land Administration. Archived from the original (PDF) on 9 September 2016. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.
  2. "New districts map". newdistrictsformation.telangana.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 August 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 "New districts". Andhra Jyothy.com. 8 October 2016 இம் மூலத்தில் இருந்து 25 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181225064351/http://www.andhrajyothy.com/artical?SID=320397. பார்த்த நாள்: 8 October 2016. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-11-19. பார்க்கப்பட்ட நாள் 2017-02-26.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜக்டியால்_மாவட்டம்&oldid=3698162" இலிருந்து மீள்விக்கப்பட்டது